யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்றார்!
யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகையின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (26) புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு, பவனியாக அழைத்து வரப்பட்டார். புனித மரியன்னை பேராலயம் தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இத்திருப்பலியில் ஆயர், யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்ப...

யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை, இன்று (26) தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலி வழிபாட்டின் மூலம் அவர் யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தனது பணிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.