ரெமோ, அந்நியன், அம்பி... - அதிர்ச்சியூட்டும் தகவலுடன் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் குறித்து பேசிய அனுபமா பரமேஸ்வரன்
பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த மாதம் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் இனிமேல் நான் சுதந்திரமாக இருப்பேன் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் நீண்ட நாட்களாக நினைத்ததை சொல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அதில் இருந்து மீண்டு புது வாழ்க்கையை தேட ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இவரது பதிவு பல யூகங்களை கிளப்பியது. இவர் ஒரு நடிகருடன் கடந்த சில மாதங்கள் காதலில் இருந்ததாகவும் அதைத் தான் இவர் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்றும் ரசிகர்கள் கணித்து வந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நடிகரின் பெயரைக் குறிப்பிட்டு பதிவிட்டு வந்தனர். ஆனால் அனுபமா பரமேஸ்வரன் இது குறித்து எதுவும் பதிலளிக்காமல் இருந்தார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் அப்பதிவு குறித்து பேசியுள்ளார். அதில் தனது காதல் முறிவு தான் எனத் தெரிவித்து பல்வேறு அதிச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்தார். அவர் பகிர்ந்ததாவது, “உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இரண்டு வருடத்து வலியின் வெளிப்பாடுதான் அந்தப்பதிவு. நான் ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அவர் ஒரு நார்சிஸ்சிஸ்டிக்(Narcissistic) நபர் போல். என்னை கட்டுப்படுத்தினார். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு நாள் அவர் 'ரெமோ' போல நடந்துகொள்வார், உங்கள் மீது அளவற்ற காதல் வைத்திருப்பது போலக் காட்டிக்கொள்வார். அதை பார்க்கும் போது நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலி எனத் தோன்றும். ஆனால், அடுத்த நாளே அந்நியன் போல மாறி, உங்களுக்கு என்ன நடந்தாலும் திருப்பிக் கூடப் பார்க்க மாட்டார். அதற்கு அடுத்த நாள்'அம்பி'யாக மாறி, ஒரு குழந்தையைப் போல கெஞ்சி மன்னிப்பு கேட்பார். பின்பு மீண்டும் அளவற்ற காதல் தொடங்கும். இது ஒரு சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் நடக்கும். அவருடன் இருந்த நாட்களில் நிம்மதியை விடப் பயத்தைத்தான் நான் அதிகமாக உணர்ந்தேன். இப்போது இதை நான் வெளிப்படையாக சொல்ல காரணம், எனக்காக நான் பேசாமல் யார் பேசுவார். இதனால் என்னை பற்றி தவறாக பேசும் 100 சதவீத ஆட்களில் 10 சதவீத ஆட்களாவது புரிந்து கொள்வார்கள் அல்லவா. அந்த 10 சதவீதம் எவ்வளவு முக்கியம் எனக்கு தெரியும்” என்றிருந்தார்.

பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த மாதம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதில், நீண்ட நாட்களாக தான் சொல்ல நினைத்தவை வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்றும், இனி தான் சுதந்திரமாக வாழப் போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு குறித்து, அனுபமா ஒரு நடிகருடன் காதலில் இருந்ததாகவும், அந்த உறவிலிருந்து மீண்டு அவர் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் யூகித்து வருகின்றனர். ரெமோ, அந்நியன், அம்பி போன்ற கதாபாத்திரங்களை குறிப்பிட்டு, டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் எனப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த உறவுகள் குறித்து அவர் அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.