63 அடி உயரம், 7 நிலைகள்! தொண்டை மண்டல பாரம்பரியத்தில் உருவாகும் காஞ்சி வரதராஜ பெருமாளின் புதிய திருத்தேர்!

ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில், 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இக்கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளில், 63 அடி உயரமுள்ள பிரம்மாண்ட திருத்தேரில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி காஞ்சி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இறை வழிபாடு செய்வது வழக்கம்.

₹4.5 கோடி மதிப்பீட்டில் கைங்கரியப் பணி

சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலின் தற்போதைய திருத்தேர் மிகவும் பழமையானதாக மாறியதை அடுத்து, அதற்குப் பதிலாக புதிய திருத்தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு சட்டமன்ற பேரவை கூட்டத் தொடரின் போது, ஒரு தனியாரின் உபயக் கைங்கரியமாக ரூபாய் 4.5 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் செய்து தரப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய பணிகள்

இதனைத் தொடர்ந்து, புதிய திருத்தேர் அமைப்பதற்கான தொடக்க விழா மற்றும் சிறப்பு பூஜைகள் கோயில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர். வி. ரஞ்சித் குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரத்துரை ஆகியோர் நேரில் கலந்து கொண்டு பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தனர்.

தொண்டை மண்டல பாரம்பரியத்தில் 7 நிலைகளுடன் புதிய தேர்

புதிய திருத்தேரின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானக் அம்சங்கள் குறித்து தேர் செய்யும் பணியினை ஏற்றுள்ள ஸ்தபதி கதிரவன் தெரிவிக்கையில், "இப்புதிய திருத்தேரானது தொண்டை மண்டல பாரம்பரிய முறைப்படி, 63 அடி உயரமும், 25 அடி 5 அங்குலம் அகலமும் கொண்டதாக அமையவுள்ளது. ஏழு நிலைகளைக் கொண்ட இத்தேர் முற்றிலும் புதிய மரங்களைக் கொண்டு கலைநயத்துடன் உருவாக்கப்பட உள்ளது. இப்பணியில் 60 வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபடவுள்ளதாகவும், அனைத்துப் பணிகளும் ஒரு வருட காலத்திற்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய திருத்தேர் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பது காஞ்சிபுரம் பகுதி மக்களிடையேயும், வரதராஜ பெருமாளின் லட்சக்கணக்கான பக்தர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

108 திவ்ய தேசங்களில் முதன்மையான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காகத் தொண்டை மண்டல பாரம்பரிய முறைப்படி, 63 அடி உயரம் மற்றும் 7 நிலைகளைக் கொண்ட பிரம்மாண்டமான புதிய திருத்தேர் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஆன்மிக நகரமான இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க கோயிலின் புதிய தேர், காஞ்சி நகர வீதிகளில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.