வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றம் கோலாகலம்; தேவாலயத்தில் திரண்ட லட்சகணக்கான பக்தர்கள்
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக பிரசித்திப் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சா்வ மதத்தினரும் வழிபட்டுச் செல்லும் ஆன்மிகத் தலமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த பேராலயத்தில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இனிமேல் துபாய் ஏர்போர்டுல உங்க லேப்டாப், ஷூஸ் தப்பிச்சிரும்; எப்படி தெரியுமா? இந்த ஆண்டு திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து, வேளாங்கண்ணி ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து புறப்பட்ட கொடி ஊர்வலம் கடை வீதி, கடற்கரை, ஆரியநாட்டுத் தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயம் வந்தடைந்தது. அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை ஏற்றினார். பின்னர் திருத்தல கலையரங்களில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் ஆகியவை நடைபெற்றன. இன்று 30-ம் தேதி முதல் செப்.7 ம் தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம் ஆலயம், மேல்கோயில், கீழ்கோயில் தினமும் காலை 5 மணிக்கு வழிபாடுகள், திருப்பலி தொடங்க உள்ளது. தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடைபெறும். ஆண்டு திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை 5.15 மணிக்கு தமிழில் செபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும், தொடர்ந்து சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து இரவு பெரிய தேர் பவனி நடைபெற உள்ளது. 8-ஆம் தேதி விண்மீன் ஆலயத்தில் காலை 8 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பின்னர் கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனா். ஏராளமான பக்தா்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, பல்வேறு ஏற்பாடுகளை பேராலய நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது. நாகை காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமணிய பாலச்சந்திரா தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். திருவிழாவுக்கு வருகைத் தரும் பக்தா்கள் நலன் கருதி வேளாங்கண்ணி கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் தடுப்புகள் அமைத்து எச்சரிக்கை பதாகை வைத்து, அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பெருவிழாவை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு அரசுப் பேருந்துகள், மத்திய அரசின் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. க.சண்முகவடிவேல்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழா, சனிக்கிழமை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் இந்த பேராலயத்தில், திருவிழாவில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
இந்த ஆன்மீகத் திருவிழா செப்டம்பர் 8-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த திருவிழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.