PulseNews
லைஃப் ஸ்டைல்

நம்ம சி.எம் சாருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மீன்... சத்து அம்புட்டு இருக்கு; கிடைச்சா விடாதீங்க!

தமிழ்நாட்டு முதலமைச்சராக இருக்கும் விஜய், குறிப்பிட்ட ஒரு மீன் வகையைத்தான் மிகவும் விரும்பி சாப்பிடுவார் என்று, ஜனநாயகன் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த நடிகை மமிதா பைஜு சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜயின் உடற்தகுதி, கட்டுப்பாடான உணவுமுறை மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறை குறித்து பேசிய அவர், விஜயின் விருப்பப்பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது சாலமன் மீன் (Salmon Fish) என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, சாலமன் மீன் குறித்து இணையத்தில் பலரும் ஆர்வமாகத் தேடி வருகிறார்கள். உலகளவில் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த மீன் ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது? இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? யாரெல்லாம் சாப்பிடலாம்? என்பதை விரிவாகப் பார்க்கலாம். நடிகராக இருந்த காலத்திலிருந்தே விஜய் உடற்பயிற்சிக்கும், கட்டுப்பாடான உணவுப் பழக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தவர். அதிக எண்ணெய், ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் அவருக்கு இருப்பதாக திரையுலகினர் பலரும் கூறியுள்ளனர். அதனால்தான் 53 வயதிலும் இளைஞர்களுக்கு இணையான உடல்தகுதியுடன் அவர் காட்சியளிக்கிறார். அந்த உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் பிடித்திருப்பதுதான் சாலமன் மீன் என்று தற்போது மமிதா பைஜு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டிய இப்படம், தணிக்கைக் குழு தொடர்பான காரணங்களால் தாமதமாக ரிலீஸாகிறது. படம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள், மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் தவெக நிர்வாகிகள் பல்வேறு கொண்டாட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அளித்து வரும் பேட்டிகளும் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகின்றன. சாலமன் மீனில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? சாலமன் மீன் உலகளவில் "சூப்பர் ஃபுட்" என அழைக்கப்படும் அளவுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. இதில் உயர்தர புரதச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (EPA, DHA), வைட்டமின் D, வைட்டமின் B12, செலினியம், பொட்டாசியம், அயோடின், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளை வழங்கும் இந்த மீன், குறைந்த அளவு செறிவூட்டப்பட்ட கொழுப்பைக் கொண்டிருப்பதால், உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களும் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு சாலமன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு மிகுந்த பாதுகாப்பை வழங்குகின்றன. ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பான HDL-ஐ அதிகரிக்க உதவுகிறது. மேலும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கவும், ரத்த உறைவு ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயமும் குறைகிறது. மூளை மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் சாலமன் மீனில் இருக்கும் DHA என்ற ஒமேகா-3 சத்து, மூளையின் செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நினைவாற்றல், கவனத்திறன், சிந்தனைத் திறன் ஆகியவற்றை அதிகரிக்க உதவுவதோடு, வயது அதிகரிக்கும் போது ஏற்படும் நினைவிழப்பு அபாயத்தையும் குறைக்கக்கூடும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளையும் குறைக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. தசை வளர்ச்சிக்கும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் ஏற்றது உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அதிகம் தேர்வு செய்யும் உணவுகளில் சாலமன் மீனும் ஒன்று. இதில் உள்ள உயர்தர புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகள் விரைவாக மீளவும், காயங்கள் சீக்கிரம் ஆறவும் உதவுகிறது. உடல் சக்தியை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளவும் இது பயனுள்ளதாக கருதப்படுகிறது. எலும்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பலம் வைட்டமின் D நிறைந்துள்ளதால், கால்சியம் உடலில் சரியாக உறிஞ்சப்பட உதவுகிறது. இதனால் எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையாக இருக்க உதவுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு மெலிவு (Osteoporosis) அபாயத்தையும் குறைக்கக்கூடும். மேலும், செலினியம் உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை பல்வேறு தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது சாலமனில் உள்ள ஒமேகா-3 மற்றும் அஸ்டாக்சாந்தின் (Astaxanthin) என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களின் ரெட்டினா ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. வயது அதிகரிப்பால் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளின் அபாயத்தையும் குறைக்கக்கூடும். அதேபோல், சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், சுருக்கங்கள் வருவதை தாமதப்படுத்தவும், தோலுக்கு இயற்கையான பொலிவை வழங்கவும் உதவுகிறது. வெளிநாட்டு சாலமன் Vs உள்ளூர் காலா மீன் தமிழ்நாட்டில் கிடைக்கும் "காலா மீன்" அல்லது "குருஜாலி" என அழைக்கப்படும் மீனை பலர் உள்ளூர் சாலமன் என்று குறிப்பிடுகின்றனர். இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அட்லாண்டிக் அல்லது பசிபிக் சாலமன் மீன்களுடன் இதன் ஊட்டச்சத்து முழுமையாக ஒரே மாதிரி இருக்காது. குளிர் பிரதேச கடல்களில் வளரும் வெளிநாட்டு பிங்க் அல்லது அட்லாண்டிக் சாலமன் மீன்களில் ஒமேகா-3, வைட்டமின் D மற்றும் அஸ்டாக்சாந்தின் சற்று அதிகமாக இருக்கும். மறுபுறம், உள்ளூர் காலா மீனில் உயர்தர புரதச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் உள்ளன. முக்கியமாக, இவை பெரும்பாலும் புதியதாக (Fresh) கிடைப்பதால் சுவையும் தரமும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் பதப்படுத்தல் தேவையில்லாததால், பலர் உள்ளூர் மீனையே ஆரோக்கியமான தேர்வாக கருதுகின்றனர். எவ்வளவு சாப்பிடலாம்? ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைப்படி, வாரத்திற்கு 2 முதல் 3 முறை வரை கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் சுமார் 100 முதல் 150 கிராம் வரை சாப்பிடுவது போதுமானதாக கருதப்படுகிறது. எண்ணெயில் ஆழமாக பொரிப்பதை விட, ஆவியில் வேக வைத்து, கிரில் செய்து அல்லது குறைந்த எண்ணெயில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. கவனிக்க வேண்டியவை சிலருக்கு கடல் உணவுகளால் அலர்ஜி இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி சாப்பிடக் கூடாது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் போன்றவர்கள் மீன் உணவை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. மேலும், நம்பகமான இடங்களில் இருந்து புதிய மீன்களை வாங்கி சமைத்து சாப்பிடுவது மிகவும் பாதுகாப்பானது. மொத்தத்தில், சாலமன் மீன் விலை உயர்ந்த உணவாக இருந்தாலும், அதன் ஊட்டச்சத்து மதிப்பு மிகவும் அதிகம். அதே நேரத்தில், பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் கிடைக்கும் புதிய உள்ளூர் காலா மீன் போன்ற மீன்களும் சிறந்த புரதச்சத்து மற்றும் பல்வேறு தாதுக்களை வழங்குகின்றன. எனவே, உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், தங்களின் தேவைக்கும் செலவுத்திறனுக்கும் ஏற்ற வகையில் வாரத்திற்கு சில முறை மீன் உணவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல ஆரோக்கியமான பழக்கமாகும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle