PulseNews
லைஃப் ஸ்டைல்

கோவில் சொத்துக்களை மட்டும் பாருங்கள்... ஆன்மிகத்தில் தலையிடாதீர்கள்; நிர்வாக அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரிகள், கோவில்களின் ஆன்மிக மற்றும் பாரம்பரிய வழக்கங்களில் தலையிட முடியாது என்றும், அவர்கள் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை (கோவில் வருமானம் உட்பட) பராமரிப்பதோடு மட்டுமே தங்களைச் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலகின் தங்க நதி: சும்மா கைவிட்டா கூட கிலோ கணக்குல தங்கத்த அள்ளிட்டு வரலாம்; உடனே கிளம்புங்க! நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அறங்காவலர் குழு இல்லாத நிலையில் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே நிர்வாக அதிகாரிகள் தகுதியான நபர்களாக செயல்பட முடியும் என்றும், அதுவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே சாத்தியம் என்றும் தெரிவித்தது. மேலும், ஒரு தகுதி நபர் நியமனம் என்பது தற்காலிக ஏற்பாடு மட்டுமே தவிர, ஆண்டு கணக்கில் தொடரக் கூடாது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி சுவாமி கோவில் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள எந்தவொரு கோவிலையும் நிர்வகிக்க, தனது நிர்வாக அதிகாரிகளை தகுதியான நபர்களாக நியமிப்பதற்கு அறநிலையத்துறைக்குத் தடை விதிக்கக்கோரி, கோவில் ஆர்வலர் டி.ஆர். ரமேஷ் தனது வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் மூலம் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். பார்த்தசாரதி கோவில் வழக்கு பின்னணி பார்த்தசாரதி சுவாமி கோவில் என்பது 1924-ஆம் ஆண்டு உரிமையியல் வழக்கில் உருவாக்கப்பட்ட நிர்வாகத் திட்டத்தின் படி நிர்வகிக்கப்படும் பழமையான வைணவக் கோவில் என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அந்தத் திட்டத்தின்படி மூன்று அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதில் ஒருவர் பிராமணர், மற்றொருவர் ஆரிய வைசியர் மற்றும் மூன்றாவது நபர் பிராமணரோ அல்லது ஆரிய வைசியரோ இல்லாதவராக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் ஐந்து ஆண்டுகள் பதவி வகிக்க உரிமையுடையவர்கள். 1976-ல் கோவில் நிர்வாகம் தொடர்பான விவகாரத்தை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 1982-ல் நீதிமன்றம் ஓர் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து, அறநிலையத்துறை அறங்காவலர்களை நியமிக்கத் தடை விதித்ததுடன், நிர்வாக அதிகாரியை தகுதியான நபராக செயல்பட வலியுறுத்தியது. இருப்பினும், 1991-ல் முதன்மை வழக்கு முடித்துவைக்கப்பட்ட போதே 1982-ஆம் ஆண்டின் இடைக்கால உத்தரவு செயலிழந்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தகுதியான நபராக செயல்படும் நிர்வாக அதிகாரியால் கோவில் நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்த முடியாது என்றனர். அறங்காவலர் குழு விரைவில் நியமிக்கப்படும் என்று கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் பி.வி. பாலசுப்பிரமணியம் தெரிவித்த வாக்குமூலத்தையும் நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். அதிகாரப் பகிர்வு மற்றும் விதிகளின் முக்கியத்துவம் நிர்வாக அதிகாரிகள் நியமன நிபந்தனை விதிகள், 2015-ன் விதி 4(ஏ), நிர்வாக அதிகாரிகள் அறங்காவலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இதன் பொருள் ஒரே நபர் இரு பணிகளையும் செய்யக்கூடாது என்பதாகும் என நீதிபதிகள் கூறினர். "இரண்டு பணிகளும் ஒரே நபரிடம் ஒருங்கிணைக்கப்பட்டால், அதிகாரச் சமநிலை மற்றும் கண்காணிப்பு முறை மறைந்துவிடும். அதிகாரம் ஊழல் செய்ய முனைகிறது, அளவற்ற அதிகாரம் முழுமையாக ஊழல் செய்கிறது என்று லார்ட் ஆக்டன் மிகத் தொலைநோக்குடன் குறிப்பிட்டுள்ளார் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் எழுதினர். மேலும், "ஆண்டு பட்ஜெட் பல கோடி ரூபாயாக இருக்கும் பல கோவில்கள் உள்ளன. பல உறுப்பினர்களை கொண்ட அறங்காவலர் குழுவும், அதே நேரத்தில் நிர்வாக அதிகாரியாகச் செயல்படும் அரசு அதிகாரியும் இருந்தால், அதிகாரம் சரியாகப் பயன்படுத்தப்படுவதை அது உறுதி செய்யும். அறங்காவலர் குழு இல்லாமல், நிர்வாக அதிகாரியையே தகுதியான நபராக செயல்பட சொன்னால், அது முறையான நிர்வாகத்திற்குச் சாதகமாக இருக்காது" என்றும் அமர்வு தெரிவித்தது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கோவில் சொத்துக்களை மட்டும் பாருங்கள்... ஆன்மிகத்தில் தலையிடாதீர்கள்; நிர்வாக அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு
PulseNews சுருக்கம்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அறநிலையத்துறையால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரிகள், கோயில் சொத்துக்கள் மற்றும் வருமானம் போன்ற நிர்வாகப் பணிகளை மட்டுமே கவனிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் கோயிலின் ஆன்மிகம் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிடக்கூடாது என்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

நிர்வாக அதிகாரிகள் கோயிலின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பராமரிக்கும் பணிகளில் மட்டுமே தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கோயிலின் ஆன்மிக நடவடிக்கைகளில் அவர்கள் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே இந்த உத்தரவின் முக்கிய சாராம்சமாகும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle