கைத்தறிக்கு நவீன டச்... 'நெசவாளர்களுக்காக மாணவர்கள் கைகோர்க்க வேண்டும்' அமைச்சர் விஜய் பாலாஜி
சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் 12வது தேசிய கைத்தறி நாளையொட்டி கோ ஆப் டெக்ஸ் மற்றும் NIFT சார்பில் நடைபெற்ற கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் மற்றும் சேலைகளை நவீன வடிவமைப்புடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் வெறும் வணிக நோக்கத்திற்காக செயல்படவில்லை என்றும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதே அதன் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார். கைத்தறித் துறையின் பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன், தற்போதைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப புதிய வடிவமைப்புகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் கூறினார்.
சென்னையில் உள்ள தேசிய ஆடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில், 12வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோ-ஆப் டெக்ஸ் மற்றும் நிஃப்ட் (NIFT) இணைந்து கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தின. இதில் பங்கேற்ற கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தமிழகத்தின் பாரம்பரிய கைத்தறி ஆடைகளை நவீன வடிவமைப்புகளுடன் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் வணிக நோக்கத்தை மட்டும் கொண்டிருக்காமல், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கைத்தறித் துறையின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, நவீன கால ரசனைக்கு ஏற்ப புதிய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.