PulseNews
லைஃப் ஸ்டைல்

45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!

தஞ்சாவூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டும் மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவில் நடைபெற உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் செப்டம்பர் 4-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.

விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைத்து தரப்பினரையும் போட்டிகளில் பங்கேற்கச் செய்து, அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன், சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவதே முதலமைச்சர் கோப்பை போட்டிகளின் முக்கிய நோக்கமாகும்.

45 வகையான விளையாட்டுகள்

கடந்த ஆண்டு 38 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் கூடுதலாக பல்வேறு விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. வில்வித்தை, ஷூட்டிங், துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் நீர்விளையாட்டுகளான கயாகிங், கேனோயிங் உள்ளிட்ட புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இந்த ஆண்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட உள்ளன. போட்டிகள் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளன.

யார் யார் பங்கேற்கலாம்?

பள்ளிப் பிரிவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இதில் 01.01.2008 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள்.

கல்லூரிப் பிரிவில் இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், பாலிடெக்னிக் மாணவர்களும் பங்கேற்கலாம். இவர்களுக்கு 25 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01.07.2001 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள்.

பொதுப்பிரிவில் 15 முதல் 35 வயது வரையிலானவர்கள் பங்கேற்கலாம். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வயது வரம்பின்றி அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்ளலாம். மேலும், அரசு ஊழியர்களுக்கென தனிப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் இந்தப் பிரிவில் பங்கேற்கலாம்.

மாவட்ட அளவில் ரூ.3,000 வரை பரிசு

மாவட்ட மற்றும் மண்டல அளவில் நடைபெறும் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் பரிசு ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000 என வழங்கப்படும்.

மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்னும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

குழு போட்டிகளிலும் குவியும் பரிசுத்தொகை

குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கும் சிறப்பான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசு பெறும் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் தலா ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களிடையேயும் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவு செய்ய வரும் ஆகஸ்ட் 31 கடைசி நாள்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். பங்கேற்பாளர்கள் தாங்களாகவே இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எனவே, விளையாட்டில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703496 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு புதிதாக பல விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை திறமையான இளம் விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, அவர்களுக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முக்கிய களமாக முதலமைச்சர் கோப்பை போட்டிகள் அமைய உள்ளன.
Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டும் நடைபெற உள்ளன. மொத்தம் 45 வகையான போட்டிகள் மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் செப்டம்பர் 4-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரேவதி தெரிவித்துள்ளார். வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle