PulseNews
லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய் படத் தயாரிப்பாளருக்கு அரசு குழுவில் இடம்!

முதல்வர் விஜய் படத் தயாரிப்பாளருக்கு அரசு குழுவில் இடம் கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள கோயில்களுக்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களை அழைத்து அறங்காவலரை நியமிக்க 7 பேர் கொண்ட குழுவை அறநிலையத்துறை நியமித்திருக்கிறது. இக்குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏஜிஎஸ் நிறுவனம் எனும் பேனரில் பல படங்களை தயாரித்துள்ளார். அதில் முதல்வர் விஜய் நடித்த பிகில் மற்றும் கோட் படங்களும் அடங்கும். விஜய்யின் தீவிர ரசிகரான இவர் அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருப்பதால் இந்த பொறுப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே முதல்வரின் மேலாளரான ஜெகதீஷுக்கு முதல்வரின் அரசியல் பிரிவு தனிச் செயலாளராகவும், ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவுக்கு தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியும், ஆன்லைன் ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் குருவுக்கு தகவல் சரிபார்ப்புக் குழுவின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முதல்வர் விஜய் படத் தயாரிப்பாளருக்கு அரசு குழுவில் இடம்!
PulseNews சுருக்கம்

ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பதற்காக, 7 பேர் கொண்ட குழுவை அறநிலையத்துறை அமைத்துள்ளது. இந்த குழுவின் உறுப்பினராகத் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் விஜய் நடித்த பிகில் மற்றும் கோட் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

விஜய்யின் தீவிர ரசிகரான அர்ச்சனா கல்பாத்திக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. முன்னதாக, விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ், தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா மற்றும் ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் குரு ஆகியோருக்கு அரசுப் பதவிகள் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle