கோவை விமான நிலையத்தில் துணை ஜனாதிபதிக்கு வரவேற்பு...! விஜய் குறித்த புத்தகம் பரிசாக வழங்கிய தமிழக அமைச்சர்...!
பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வந்தார். கோவை விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார். துணை ஜனாதிபதியை வரவேற்க தமிழக அரசு சார்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் விமான நிலையத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பூங்கொத்து வழங்கி வரவேற்றார். அப்போது, நடிகர் விஜய் தொடர்பாக வெளியாகியுள்ள ‘ஜோசப் விஜய் உன் பேரே வரலாறு’ என்ற புத்தகத்தை அமைச்சர் வே.சம்பத்குமார், துணை ஜனாதிபதிக்கு பரிசாக வழங்கினார். துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி கோவை விமான நிலையம் மற்றும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் வே.சம்பத்குமார் ஆகியோர் நேரில் சென்று அவரை வரவேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், நடிகர் விஜய் குறித்த புத்தகம் ஒன்றை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பரிசாக வழங்கினார்.