PulseNews
லைஃப் ஸ்டைல்

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் விஜய்..

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியேற்றிய போது மக்கள் ஆரவாரம் முதலமைச்சர் விஜய் சுதந்திர தின உரை நான் கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வருகை தந்த மக்களுக்கு நன்றி - முதலமைச்சர் விஜய் சுதந்திர போராட்ட தியாகிகளை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் சுதந்திர போரில் உயிர் நீத்தவர்களுக்கு என் வீரவணக்கம் - முதலமைச்சர் விஜய் அடிமையாக இருப்பதை உணர்ந்த பிறகு தான் மக்கள் ஒன்று சேருவார்கள் - முதலமைச்சர் விஜய் மக்கள் ஒன்று சேரும் போது ஜாதி, மதம் உள்ளிட்ட வேறுபாடுகள் உடையும் மக்களிடையே ஜாதி, மதம் வேறுபாடு உடைவது தான் உண்மையான சுதந்திரம் சுதந்திரம் மூலம் கிடைத்த முன்னேற்றத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிப்பதும் விடுதலைக்கு சமமான ஒன்று - முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டை லஞ்சம், ஊழலில் இருந்து விடுவிக்க பாடுபட்டு வருகிறேன் - முதலமைச்சர் விஜய் என்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்ற வைத்த மக்களுக்கு நன்றி - முதலமைச்சர் விஜய் என்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்ற வைத்த GEN Z இளைஞர்களுக்கு நன்றி - முதலமைச்சர் விஜய் தவெக அரசு உண்மையான, நேர்மையான, வெளிப்படையான அரசாக செயல்படுகிறது - முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும் - முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை தவெக அரசு தொடரும் - முதலமைச்சர் விஜய் ஜெயலலிதாவின் அம்மா உணவகத்தை மேம்படுத்தி தொடர்கிறோம் - முதலமைச்சர் விஜய் காலை உணவுத்திட்டத்தையும் தவெக அரசு விரிவுபடுத்தி செயல்படுத்துகிறது - முதலமைச்சர் விஜய் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் - முதலமைச்சர் விஜய் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 125 நாள் வேலை திட்டம் அமலுக்கு வந்துள்ளது - முதலமைச்சர் விஜய் செப் - 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவங்க உள்ளது - முதலமைச்சர் விஜய் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 300 புதிய பேருந்துகள் சேவைகள் துவக்கம் - முதலமைச்சர் விஜய் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன - முதலமைச்சர் விஜய் லஞ்சம் குறித்து புகார் அளிக்க பிரத்யேக வாட்ஸ்ஆப் எண் வழங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய் தவெக ஆட்சியில் அரசு வருமானம் தனிநபர்களுக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய் மாநில உரிமைகளை ஒரு போதும் தவெக அரசு விட்டுக்கொடுக்காது - முதலமைச்சர் விஜய் தேர்தல் வெற்றியை கொடுத்ததோடு மக்கள் கடமை முடிந்துபோய்விடாது - முதலமைச்சர் விஜய் தேர்தல் வெற்றிக்கு பிறகும் மக்கள் தொடர்ந்து என்னுடன் இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் என்னை பொறுத்தவரை மக்கள் தான் ஆட்சியாளர்கள் - முதலமைச்சர் விஜய் என்னை பொறுத்தவரை நான் எப்போதும் மக்களுக்கான சேவகன் - முதலமைச்சர் விஜய் சதிகளை முறியடிக்க மக்கள் எனக்கு துணை நிற்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் முன்னாள் படை வீரர்களின் மகள்கள் திருமண நிதி உதவி ரூ.50,000ஆக உயர்வு- முதலமைச்சர் விஜய் மாற்றுத்திறன் படை வீரர்கள் மாதாந்திர உதவித் தொகை இனி ரூ.7000 - முதலமைச்சர் விஜய் விடுதலை போராட்ட வீரர்கள் மாத ஓய்வூதியம் இனி ரூ.23000 - முதலமைச்சர் விஜய் விடுதலை போராட்ட வீரர்கள் குடும்ப மாத ஓய்வூதியம் இனி ரூ.12500 - முதலமைச்சர் விஜய் ஊழல் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க மக்கள் துணை நிற்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் சுதந்திர தின விழா விருதுகள் சுதந்திர தின விழா விருதுகள் வழங்குகிறார் முதலமைச்சர் விஜய் வழங்குகிறார் தகைசால் தமிழர் விருது - காங்., மூத்த தலைவர் எம்.கிருஷ்ணசாமி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது - டாக்டர் வி. மோகன் (நீரிழிவு நோய் நிபுணர்) கல்பனா சாவ்லா விருது - கோயம்புத்தூரைச் சேர்ந்த நௌஷீன் பானு சந்த் டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தானை இருமுறை வென்ற ஒரே தமிழக பெண் நௌஷீன் முதலமைச்சரின் நல் ஆளுமை விருது - நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா முதலமைச்சரின் நல் ஆளுமை விருது - சதீஷ் பிரபு குழுவினர் (மெட்ரோ ரயில் நிறுவனம்) முதலமைச்சரின் நல் ஆளுமை விருது - கீதாஞ்சலி (கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்) சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் - கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் சிறந்த மருத்துவர் - திருநாவுக்கரசு ( சென்னை அரசு புனர்வாழ்வு மருத்துவமனை) சிறந்த நிறுவனம் - சிருஷ்டி பவுண்டேஷன் திண்டிவனம் (விழுப்புரம்) சிறந்த சமூக சேவகர் - மணிமாறன் (திருவண்ணாமலை) அதிக மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்திய நிறுவனம் - எஸ்.சி.எம் கார்மெண்டஸ் (திருப்பூர்) சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி - மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மகளிர் நலனுக்காக பணியாற்றிய தொண்டு நிறுவனம் - அட்சயம் டிரஸ்ட் (ஈரோடு) மகளிர் நலனுக்காக பணியாற்றிய சமூக சேவகர் - ராதா (ஓசூர்) சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்: முதல் பரிசு - 6ஆவது மண்டலம், 2ஆம் பரிசு - 2ஆவது மண்டலம் சிறந்த மாநகராட்சி: முதல் பரிசு - கோவை, 2ஆம் பரிசு - தஞ்சாவூர் சிறந்த நகராட்சி: முதல் பரிசு - போடிநாயக்கனூர், 2ஆம் பரிசு - ஆரணி, 3ஆம் பரிசு - விழுப்புரம் சிறந்த பேரூராட்சி: முதல் பரிசு - திருவிடைமருதூர், 2ஆம் பரிசு - கருங்கல், 3ஆம் பரிசு - செட்டிபாளையம் மாற்றுத்திறன் சிறுவர்களுக்கு இனிப்புகளை வழங்கிய முதலமைச்சர் விருதாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் முதலமைச்சர் விஜய்

Polimer News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் விஜய்..
PulseNews சுருக்கம்

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், கொடியேற்றுவதைக் காண வந்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். சுதந்திரப் போராட்ட தியாகிகளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதாகக் கூறினார். அடிமைத்தனம் குறித்த உணர்வு ஏற்பட்ட பிறகுதான் மக்கள் ஒன்று சேருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle