சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா பங்கேற்பு!
நாட்டின் 80வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2026) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் விஜய் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் சுதந்திர தின உரையாற்றினார். இந்த விழாவில் முன்னணித் திரைப்பட நடிகை திரிஷா கலந்துகொண்டது பொதுமக்களிடையேயும் சமூக வலைதளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அரசுமுறை நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நடிகை விழா மேடையின் முன் வரிசையில், முதலமைச்சரின் பெற்றோர்களான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் ஆகியோருக்கு அருகில் அவர் அமர்ந்திருந்தார். சுதந்திர தின அணிவகுப்பின் போது காவல்துறையினரின் மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்ட சமயத்தில், நடிகை திரிஷாவும் எழுந்து நின்று அவருக்கு சல்யூட் அடித்துத் தனது மரியாதையை வெளிப்படுத்தினார். இந்த விழா நிறைவடைந்த பின்னர், அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய்க்கு அவரது பெற்றோருடன் இணைந்து நடிகை திரிஷாவும் கையசைத்து வழியனுப்பி வைத்தார். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்கும் இத்தகைய உயர்மட்ட அரசு விழாவில், திரையுலகைச் சேர்ந்த திரிஷா கலந்துகொண்டு முன்வரிசையில் அமர்ந்திருந்தது, விழா அரங்கில் இருந்தவர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று (15.08.2026) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டு, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர், சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இந்த விழாவில் முன்னணித் திரைப்பட நடிகை திரிஷா பங்கேற்றது, பொதுமக்களிடையேயும் சமூக வலைதளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.