Avani Avittam 2026 நாளை ஆவணி அவிட்டம் 2026 இந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் பாவங்களில் இருந்து விடுபடலாம்?
ஆவணி அவிட்டம், பிராமணர்கள் சமூகத்திற்கு உரிய முக்கியமான சடங்கு நாள் என பலரும் ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் புதிய துவக்கத்தை பெற வேண்டும், ஞானத்தை பெற வேண்டும் என்பவர்கள் இந்த நாளில் வழிபடலாம். இந்த நாளில் ஞானத்தின் கடவுளான ஹயக்ரீவரையும், சரஸ்வதி தேவியையும், மந்திரங்களின் தாயாக கருதப்படும் காயத்ரி தேவியையும் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகளால் கடந்த காலங்களில் நாம் அறியாமல் செய்த பாவங்களில் இருந்தும், மந்திரங்களை தவறாக உச்சரித்ததாக ஏற்பட்ட தோஷங்களில் இருந்தும் விடுபட முடியும் என சொல்லப்படுகிறது.
2026-ஆம் ஆண்டின் ஆவணி அவிட்டம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நாளை பிராமணர்களின் சடங்கு தினமாக மட்டும் பார்க்காமல், புதிய தொடக்கத்தையும் ஞானத்தையும் பெற விரும்பும் அனைவரும் வழிபட்டு பயன்பெறலாம்.
இந்நாளில் ஞானத்தின் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி தேவி மற்றும் காயத்ரி தேவியை வழிபடுவது மிகுந்த சிறப்பைத் தரும். இத்தகைய வழிபாடுகள், கடந்த காலத்தில் அறியாமல் செய்த பாவங்களையும், மந்திரங்களை உச்சரித்ததில் ஏற்பட்ட தோஷங்களையும் நீக்கி நன்மைகளை வழங்கும்.