கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் வீர நரசிம்ம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க தேரோட்டத்தில் பங்கேற்று 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை, ஜூலை 22;

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மங்கைமடம் கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு வீர நரசிம்ம பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பஞ்ச நரசிம்மர் சேத்திரங்களில் 2-வது தலமாகப் போற்றப்படும் இத்தலம், ஆன்மிக வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. திருமங்கை மன்னன் தனது வாழ்நாளில் குமுதவள்ளியைத் திருமணம் புரியும் நோக்கில், 1008 வைணவர்களுக்கு ஒரு வருடம் முழுமையாகத் ததி ஆராதனை (அன்னதானம்) செய்து, எம்பெருமானின் பேரருளைப் பெற்று 'திருமங்கை ஆழ்வார்' என்ற திருநாமம் பெற்ற திவ்ய தேசம் இதுவாகும். இத்தலம் அமைந்துள்ள பகுதி 'திருமங்கை வளநாடு' என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறது.

தோஷ நிவர்த்தி ஸ்தலம்

இத்தகைய பழமையும் ஆன்மிகச் சிறப்பும் பல வாய்ந்த இத்தலத்தில் வீர நரசிம்ம பெருமாளை மனதாரச் சேவித்தால், ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கி, தடைப்பட்ட திருமணம் கைகூடும் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். இதனால் இப்பகுதி மக்களுமன்றி, வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

பிரம்மோற்சவ திருவிழா மற்றும் தேரோட்டம்

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த ஜுலை 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் விழாவாக ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் சமேத வீர நரசிம்ம பெருமாள் ஆகியோரின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்ற நிலையில், 9 நாட்கள் நடைபெறும் இத்ததிருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையிலேயே மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

பக்திப் பரவசத்தில் வலம் வந்த தேர்

தொடர்ந்து, ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் சமேத வீர நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்கப் புறப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட திருத்தேரில் எழுந்தருளினார். தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை காண்பித்தனர்.

இதனையடுத்து 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற பக்தி முழக்கத்துடன் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரானது நான்கு வீதிகளின் வழியாகச் பக்திப் பரவசத்துடன் வலம் வந்தது. தேரோட்டப் பாதையின் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், தங்களது வீடுகளின் முன்பு கோலமிட்டு, தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து, தீபாராதனை எடுத்து பெருமாளை வழிபட்டனர். விழாவில் சீர்காழி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வீர நரசிம்ம பெருமாளையும், செங்கமலவல்லி தாயாரையும் தரிசித்து ஆன்மிகப் பேறு பெற்றனர். கோவில் நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Abp News-இல் முழு செய்தியைப் படிக்க →