உலகின் முதல் இலாப நோக்கற்ற ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்திய ‘யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன்’!
யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே, மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த ஓடிடி கலைஞர்கள், பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினரை ஒன்றிணைத்து, பொழுதுபோக்கை சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றியமைக்கும் ஒரு வரலாற்று முயற்சி, இந்த தளத்தில் இலவசமாக திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். அதே சமயம் நாம் ஏதாவது பங்களிப்பு செய்ய விரும்பினால் அதையும் நன்கொடையாக தாராளமாக அளிக்கலாம். அந்த தொகையும் ஆதரவற்ற மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க யுவர்பேக்கர்ஸ் பிளே ஓடிடி துவக்க விழா தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. முன்னதாக இந்த ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கும் மனிதம், வி3, கோட்டா, மெல்லிசை, தாவுத், ஓ பட்டர்ஃபிளை போன்ற திரைப்படங்களின் டிரைலரும் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும் யுவர்பேக்கர்ஸ் சி.இ.ஓ ஜான் ஜூலியஸ், இயக்குநர் புருனோ, தயாரிப்பாளர் ஜேகே சரவணன், ஜேகே சதிஷ், ஸ்டார் ஹோம்ஸ் செல்வக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

உலகின் முதல் இலாப நோக்கற்ற ஓடிடி (OTT) தளமான ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ தளத்தை யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் சமூக சேவையை ஒருங்கிணைக்கும் இந்த தளத்தில், பயனர்கள் காணும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் நிறுவனரான கிஷோர் ஆதித்யா, ஏற்கனவே ‘மனிதம்’ திரைப்படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தளத்தில் மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் படைப்புகள் இடம்பெறுகின்றன.