PulseNews
லைஃப் ஸ்டைல்

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் விஜய்!

நாட்டின் 80வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2026) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செங்கோட்டையின் கொத்தளத்திற்குப் பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் அவரை வரவேற்கின்றனர். அதோடு பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், டெல்லி பிராந்தியத்தின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் சேத்தியை பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையைப் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாகத் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியைத் முதல்வர் விஜய் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் சுதந்திர தின உரையாற்றினார்.

Nakkheeran17 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் விஜய்!
PulseNews சுருக்கம்

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று (15.08.2026) நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில், பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையின் கொத்தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle