PulseNews
லைஃப் ஸ்டைல்

CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் பிரபலங்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.

இந்திய சுதந்திர தினம்

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததை நாம் ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த தேசப்பற்றுடன் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் 80வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக வீட்டிலிருந்து புறப்பட்ட அவருக்கு வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே வந்த விஜயின் வாகனத்தை போலீசார் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்பு மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் முப்படைகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் விஜய் திறந்தவெளி ஜீப்பில் பயணித்து காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

வெளியான முக்கிய அறிவிப்புகள்

முன்னாள் படைவீரர்களின் நலன் கருதி அவர்களின் இரண்டு மகள்களுக்கும் வழங்கப்படும் திருமண நிதியுதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் அல்லது அவர்கள் சார்ந்தோருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படும்.

மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.23 ஆயிரமாக உயர்த்தப்படும்.

மாநில அரசால் விடுதலைப் போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்படும்.

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி வழித்தோன்றதலுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தப்படும். இவற்றிற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
PulseNews சுருக்கம்

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் பிரபலங்களும் என நூற்றுக்கணக்கானோர் திரளாகக் கலந்துகொண்டனர்.

1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் தேசப்பற்றுடன் கொண்டாடப்படும் இந்த சுதந்திர தின விழா, இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றது. இதன்போது முதலமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle