PulseNews
லைஃப் ஸ்டைல்

Rasi Palan Today (24-08-2026): மேஷத்துக்கு செலவு.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்? - இன்றைய பலன்கள் இதோ!

ஆகஸ்ட் 24ம் தேதி திங்கட்கிழமையான இன்று ஆவணி மாதத்தின் 7ம் நாளாகும். இன்றைய நாளின் ராசிபலன், நல்ல நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் காணலாம்.

இன்றைய நாளின் விவரம்

நாள்: 24.08.2026 - திங்கட்கிழமை

திதி: வளர்பிறை துவாதசி

நட்சத்திரம்: இரவு 10.16 வரை பூராடம், அதன்பிறகு உத்திராடம்

நல்ல நேரம்

காலை 09.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம்

மதியம் 1.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை
மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

இராகு

காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

குளிகை

மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்

காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் - கிழக்கு

ஆகஸ்ட் 24 ராசிபலன்கள்

மேஷம்

சகோதரர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சாஸ்திர சடங்குகளை பற்றிய புரிதல் பிறக்கும். தொழில் வகையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தர்ம காரியத்தில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பங்காளி வகையில் ஏற்பட்ட வேறுபாடுகள் மறையும். மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும்.

ரிஷபம்

உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வெளியூர் வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு வழியில் அலைச்சல் ஏற்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும்.

மிதுனம்

திறமைக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தி உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். வர்த்தக பணிகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றம் ஏற்படும்.

கடகம்

விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல சந்தர்ப்பம் கைகூடி வரும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள்.

சிம்மம்

பிள்ளைகளுடன் இருந்த வேறுபாடுகள் குறையும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியிலான ஆதரவுகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவுபெறும். பொழுதுபோக்கு செயல்களில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள்.

கன்னி

எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உடன் பிறந்தவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். எண்ணிய சில பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விவேகத்துடன் செயல்படுவது நல்ல மாற்றத்தை உண்டாக்கும். புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். இணையம் தொடர்பான துறைகளில் ஆலோசனைகள் கிடைக்கும்.

துலாம்

எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இசை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.

விருச்சிகம்

மனதில் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். பயணம் மூலம் இன்பமான அனுபவம் ஏற்படும். அடமான பொருள்கள் பற்றிய கவலைகள் ஏற்படும். தனவரவுகள் மூலம் வங்கி இருப்புகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும்.

தனுசு

எதிலும் பரபரப்புடன் செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் காணப்படும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும்.

மகரம்

திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். துணைவழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றம் ஏற்படும். மனம் தெளிவு பெரும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். துணைவர் இடத்தில் அனுசரித்து செல்லவும்.

கும்பம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும்.

மீனம்

எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சமூக நிகழ்வுகள் மனதளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் விலகும். குடும்ப பெரியோர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபார பணிகளில் வேலையாட்களுடன் பொறுமையை கையாளவும்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Rasi Palan Today (24-08-2026): மேஷத்துக்கு செலவு.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்? - இன்றைய பலன்கள் இதோ!
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 24, 2026, திங்கட்கிழமை, ஆவணி மாதம் 7-ம் நாளாகும். இன்றைய நாளில் வளர்பிறை துவாதசி திதி நிலவுகிறது. நட்சத்திரத்தைப் பொறுத்தவரை, இரவு 10.16 மணி வரை பூராடம் நட்சத்திரமும், அதன் பிறகு உத்திராடம் நட்சத்திரமும் அமைகின்றன.

இன்றைய தினத்தின் நல்ல நேரமாக காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரையிலும், மாலை 4.45 மணி முதலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேஷம் உள்ளிட்ட அனைத்து ராசிகளுக்கான பலன்கள் மற்றும் இன்றைய நாளின் முக்கிய விவரங்களை இப்பகுதியில் விரிவாகக் காணலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle