PulseNews
லைஃப் ஸ்டைல்

Rasi Palan Today (25-08-2026): கும்பத்துக்கு வெற்றி.. மீனத்துக்கு மகிழ்ச்சி.. இன்று உங்க ராசிக்கு நல்லது நடக்குமா?

ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ நாளான இன்று 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் நாளாகும். இன்றைய நாளில் 12 ராசிகளுக்குமான பலன்களை இங்கு காணலாம்.

பஞ்சாங்கப்படி இன்றைய நாளின் விவரங்கள்

நாள்: 25.08.2026 - செவ்வாய்கிழமை

திதி: வளர்பிறை துவாதசி

நட்சத்திரம்: உத்திராடம் நாள் முழுவதும்

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

மதியம் 1.45 மணி முதல் 2.45 மணி வரை
இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை

இராகு:

மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை

குளிகை:

மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

இன்றைய ராசிபலன்கள் (ஆகஸ்ட் 25)

மேஷம்

மகிழ்ச்சியான நினைவுகள் மூலம் மன அமைதி ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உருவாகும். ஒப்பந்தம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். இழுபறியான தொழில் சார்ந்த வரவுகள் கிடைக்கும். பணிகளில் பொறுப்புக்கள் குறையும்.

ரிஷபம்

உத்தியோக பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் வர்த்தக செயல்களில் சிந்தித்து செயல்படவும். விளையாட்டான பேச்சுகளை குறைத்து கொள்ளவும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வழக்கு சார்ந்த அலைச்சல் ஏற்படும்.

மிதுனம்

பணிபுரியும் இடத்தில் சில சில அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும்.

கடகம்

நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும. புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அரசு சம்பந்தமான பணிகளில் துரிதம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம்

வெளிவட்டார பழக்கம் விரிவடையும். மனதில் உற்சாகம் பிறக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளால் திடீர் யோகம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். வியாபாரம் சார்ந்து திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கன்னி

குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். மனதளவில் இருந்த தயக்கத்தை தவிர்க்கவும். உணவு செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். வணிக நடவடிக்கைகளில் லாபம் மேம்படும். யதார்த்தம் தாண்டிய கற்பனைகளை குறைத்து கொள்ளவும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும்.

துலாம்

பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். கோப உணர்ச்சிகளை குறைத்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்

மகிழ்ச்சியான பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.

தனுசு

உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் இருந்து வந்த தடைகள் விலகும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலை காணப்படும். தனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும்.

மகரம்

எதிலும் பொறுமையுடன் செயல்படவும். அரசு காரியத்தில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். பெரியவர்களிடம் நன்மதிப்புகள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு வந்து செல்லும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும்.

கும்பம்

பேச்சுகளில் சற்று நிதானம் வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வகையில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்கள் இருக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தக்க நேரத்தில் சில உதவிகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும்.

மீனம்

உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புது முதலீடுகள் அதிகரிக்கும். உங்கள் மீதான வதந்திகள் மறையும்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Rasi Palan Today (25-08-2026): கும்பத்துக்கு வெற்றி.. மீனத்துக்கு மகிழ்ச்சி.. இன்று உங்க ராசிக்கு நல்லது நடக்குமா?
PulseNews சுருக்கம்

2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதியான இன்று, ஆவணி மாத வளர்பிறை பிரதோஷம் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய சிறப்புடன் கூடிய நாளாகும். இன்றைய தினத்திற்கான பஞ்சாங்க விவரங்களின்படி, வளர்பிறை துவாதசி திதியும், நாள் முழுவதும் உத்திராடம் நட்சத்திரமும் நிலவுகின்றன.

இன்றைய நாளில் காலை 10.45 மணி முதல் 11.45 வரையிலும், மாலை 4.45 மணி முதல் 5.45 வரையிலும் நல்ல நேரமாக அமைகிறது. கும்ப ராசிக்கு வெற்றியும், மீன ராசிக்கு மகிழ்ச்சியும் கிடைக்கக்கூடிய இன்றைய நாளில், 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை விரிவாகக் காணலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle