அம்பாசமுத்திரம் தவெகவில் குழப்பம்: இசக்கி சுப்பையாவின் மௌனத்தால் அதிருப்தியில் நிர்வாகிகள்
முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் எந்தவிதமான சுவரொட்டிகளையும் ஒட்டாமல் மௌனம் காத்து வருவது நெல்லை மாவட்ட தவெக தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை உ…

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் எந்தவிதமான சுவரொட்டிகளையும் ஒட்டாமல் மௌனம் காத்து வருவது நெல்லை மாவட்ட தவெக தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம் தொகுதியில் நிலவும் இந்தச் சூழல், கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இசக்கி சுப்பையா மீண்டும் அதிமுகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாகப் பரவும் தகவல்களே இந்தத் அதிருப்திக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அவரது இந்த திடீர் அரசியல் நகர்வு மற்றும் செயல்பாடுகள் அக்கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.