தெலங்கானா அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: அமைச்சர் கொண்டா சுரேகா நீக்கம்
தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த கொண்டா…
தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த கொண்டா சுரேகாவை, அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சரவைக்குள் நிலவிய தொடர் குழப்பங்களும், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதல்களுமே இந்த அதிரடி முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நீக்க நடவடிக்கை அம்மாநிலத்தின் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, தற்போதைய அரசியல் சூழல் குறித்த பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது.