முதல்வர் விஜய்யின் 100 நாள் ஆட்சி? - ரஜினி கொடுத்த ரியாக்ஷன்!
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வருகை தந்த ரஜினியிடன் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டனர். அதற்கு நடந்தபடியே பதிலளித்து சென்றார். திரைபப்டம் தொடர்பான கேள்விகளுக்கு, “ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து தர்மன் படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தை கமல் தயாரிக்கிறார். அது இல்லாமல் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நானும் அவரும் சேர்ந்து ஒரு படம் நடிக்கிறோம், அவ்வளவுதான்” என்றார். அதன் பிறகு அவரிடன் முதல்வர் விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி இருக்கிறது எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எந்த வித பதிலும் கொடுக்காமல் அனைவருக்கும் நன்றி சொன்னபடியே காரில் ஏரி சென்றார். முன்னதாக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது, ஆனால் விஜய்யிடம் பேசிவிட்டேன் என பின்பு ஒரு நிகழ்ச்சியில் ரஜினி தெரிவித்திருந்தார். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு தொடர்ச்சியாக அவர் பதில் அளிக்க மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகிறது. தற்போது அவர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'தர்மன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார், இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்துச் சென்றார். முதல்வர் விஜய் குறித்த கேள்விக்கு அவர் வழங்கிய எதிர்வினை தற்போது கவனம் பெற்றுள்ளது.