Karthigai Deepam: பரமேஸ்வரி பாட்டி வீட்டில் பர்த்டே செலிபிரேஷன்.. அப்செட்டின் உச்சியில் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில், ரேவதிக்கு வாழ்த்து சொல்ல, அனைவரும் வீட்டிற்கு வந்த நிலையில், அவர் கர்ப்பமாக இல்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று நடக்கவுள்ள சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.

வீட்டில் யாரும் இல்லாத நிலை:

இன்றைய எபிசோடில், அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, பாட்டி வந்திருக்கும் அனைவரையும் சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கூறி விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்.

இதற்கிடையில், சாமுண்டீஸ்வரியின் வீட்டில் எந்த அறையிலும் யாரும் இல்லாததையும், அனைத்து குழாய்களும் திறந்து கிடப்பதையும் சந்திரகலா கவனிக்கிறார். உடனே இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியிடம் சொல்லி, "அனைவரும் அங்கேதான் இருப்பார்கள், வாங்க போகலாம்" என கூறுகிறார். ஆனால், "நான் எதற்காக அங்கே வர வேண்டும்? எல்லாரும் இங்கே வரட்டும்" என்று சாமுண்டீஸ்வரி கோபத்துடன் காத்திருக்கிறார்.

ராஜராஜன் வார்னிங்:

மறுபுறம், பாட்டி ஏற்பாடு செய்த விருந்தை அனைவரும் மகிழ்ச்சியுடன் ரசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டிற்கு கேக் டெலிவரி வர, அது சுவாதியின் பிறந்தநாளுக்காக கார்த்திக் மற்றும் ரேவதி இணைந்து ஏற்பாடு செய்தது என்பது தெரிய வருகிறது.

சுவாதி கேக் வெட்டி கொண்டாடிய பிறகு, ராஜராஜன் அனைவரையும் வீட்டிற்கு கிளம்புமாறு கூறுகிறார். "வீட்டில் யாரும் இல்லை என்பது சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும்" என்று எச்சரித்து அனைவரையும் அழைத்துச் செல்கிறார்.

சுவாதியின் கோபம்:

வீட்டிற்கு திரும்பியதும், சாமுண்டீஸ்வரி தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார். அப்போது சுவாதி, "இன்று என்னுடைய பிறந்தநாள். அதை கூட நீங்கள் மறந்துவிட்டீர்கள். அதனால்தான் நாங்கள் எல்லாரும் அங்கே சென்றோம்" என்று கூறி சூழ்நிலையை சமாளிக்கிறார். இதனால் சாமுண்டீஸ்வரியும் அமைதியாகிறார்.

இவ்வாறான பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நகரவுள்ளது. அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள, கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் கண்டு மகிழுங்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு வாழ்த்து தெரிவிக்க அனைவரும் கூடியிருந்த நிலையில், அவர் கர்ப்பமாக இல்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
இன்றைய எபிசோடில், பரமேஸ்வரி பாட்டியின் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் சாமுண்டீஸ்வரி மிகுந்த அதிருப்தியில் உள்ளார், மேலும் வீட்டில் அனைவரும் இல்லாத சூழலில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து இன்றைய கதையில் காணலாம்.