“எந்த பதிலும் இல்லை...” - லோகேஷ் கனகராஜ் படக்குழு மீதி நிவின் பாலி அதிருப்தி!
லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட், பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ராகவா லாரனஸ், நிவின் பாலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எல்.சி.யு பாணியில் இப்படம் உருவாகுவதாக படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் கடைசியாக ரவி மோகனும் படத்தில் இணைந்துள்ளதால் அது எகிறியது. இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியானது. பின்பு பல்வேறு கட்டங்களாக நடந்து வந்தது. ஆனால் தொடர்ச்சியாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் நிவின் பாலி படப்பிடிப்பு எப்போது நடக்கும் எனத் தெரியவில்லை என தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். மலையாளத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், “பென்ஸ்’ படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தால், கடைசி 2 இரண்டு படங்களுமே ஒரே லுக்கில் நடித்துள்ளேன். அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது. அப்படக் குழுவினரை அழைத்தாலும் எந்தவித பதிலுமே இல்லை. இந்தப் பேட்டியைப் பார்த்தாவது எனது சூழலை புரிந்துக் கொண்டு முடிவு எடுங்கள்” என்றுள்ளார். ஒரு பெரிய நடிகர் இப்படி வெளிப்படையாக பேசியிருப்பது திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. முன்னதாக இபப்டத்தில் இருந்து வெளியான நிவின் பாலியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வரவேற்பை பெற்றிருந்தது. அதில் ட்வின் ஃபிஷ் வால்டர் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 'பென்ஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது. ஜி ஸ்குவாட், பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
எல்.சி.யு பாணியில் இப்படம் உருவாவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், சமீபத்தில் ரவி மோகனும் இப்படத்தில் இணைந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இப்படம் குறித்த படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் சூழலில், படக்குழுவிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால் நடிகர் நிவின் பாலி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.