Ilayarajaa: சத்யராஜ் படத்தின் அந்த காட்சிக்கு மட்டும் இசையமைக்க மறுத்த இளையராஜா - எந்த படம்? என்ன சீன்?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சத்யராஜ். இவரது நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான திரைப்படம் திருமதி பழனிசாமி. குழந்தைத் தொழிலாளர்களை எதிர்த்து படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி வெளியான திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படம் குறித்து அந்த படத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான தகவலை கீழே காணலாம். கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது,

இசையமைக்க மறுத்த இளையராஜா:

திருமதி பழனிசாமி படத்தில் கடைசி ரீல். 13 ரீல் ரீ ரீக்கார்டிங் செய்துவிட்டார். கடைசி ரீல் ஒரு கார்ட் போட்றேன். படம் முடிகிறது. அந்த கார்டில் 10 ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடுவதைக் காட்டிலும் ஒருவனை படிக்க வை. அதுதான் தர்மம். அதில்தான் அப்துல்கலாம் உருவாவார். அன்னை தெரசா உருவாவார் என்று கார்டு போட்டேன். இளையராஜா ரீ ரெக்கார்டிங் பண்ணமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

அதென்னய்யா கடவுள் என்று ஒன்று இல்லாமல் இதெல்லாம் நடக்கும்னு? தூக்குனாதான் ரீ ரெக்கார்டிங்னு சொல்லிட்டாரு. இவரோட மேனேஜர்தான் தயாரிப்பாளர். படம் வேறு ரிலீஸ். 15 நாள்தான் இருக்கிறது. அந்த ரீல்ல கைவைக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.

கார்டில் இருந்தது என்ன?

அந்த கதைக்கு அது தேவைசார். அதுனால அதை தூக்கவிடாதீங்க சார்னு சொன்னோம். ஆனால், அவர் கை வைக்கமாட்டேனு சொல்லிட்டாரு. அவர் பண்ணமாட்டேனு சொல்லிட்டாரு. அப்புறம் நான் மகாத்மா காந்தி 4 ஆண் பிள்ளைகளைப் பெற்றார். ஒன்று கூட அவர் பெயர் சொல்லவில்லை. நேரு ஒரே ஒரு மகளைப் பெற்றார். உலகம் முழுவதும் அவர் பெயர் சொன்னாங்க. அப்படினு கார்ட் போட்டேன்.

இளையராஜா மகிழ்ச்சி அடைந்தார். ரீ ரிக்கார்டிங் பண்ணி கொடுத்தார். 10 நாள் இருக்கும்போது சென்சாருக்கு போனோம். சென்சாரில தூக்கு என்று விட்டார்கள். நேருவையும், காந்தியையும் எப்படி ஒப்பிடலாம்? என்றார்கள். இப்போது, கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள். ஒரு ஊருக்கு கோயில் கூட இல்லாமல் இருக்கலாம். பள்ளிக்கூடம் இல்லாமல் போனால் தறுதலைகளாக சென்றுவிடுவார்கள். இளையராஜா எதை எதிர்த்தாரோ? அதைவிட வலுவாகத்தான் படத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கல்வித் திரைப்படம்:

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய திருமதி பழனிசாமி படத்தில் சுகன்யா, கவுண்டமணி, ரேகா, ஸ்ரீவித்யா, நாசர், கோவை சரளா, பாபு ஆண்டனி, டெல்லி கணேஷ் என பெரிய பட்டாளமே நடித்திருப்பார்கள். குழந்தைத் தொழிலாளரை எதிர்த்து காமெடி ஆக்ஷன் திரைப்படமாக உருவான இந்த படம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வெளியான திரைப்படம் ஆகும். இந்த படம் சத்யராஜுன் திரைவாழ்வில் வெளியான திரைப்படங்களில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாகும்.

1992-ம் ஆண்டு வெளியான 'திருமதி பழனிசாமி' திரைப்படத்தில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராகவும், கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தத் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, படத்தின் கடைசி ரீல் காட்சிக்கான பின்னணி இசை அமைப்பதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்ததாக அவர் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.