“எனக்கு நடிப்பு கற்றுக் கொடுப்பாயா...” - சிறுமியிடம் கேட்ட தனுஷ்!
இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘இருமுடி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சபரிமலை சுவாமி பின்னணியில் ஆக்ஷன், செண்டிமெண்ட், பக்தி உள்ளிட்ட அம்சங்களோடு கடந்த 21 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் ‘இருமுடி கட்டு’ என்ற தலைப்பில் வெளியானது. இங்கும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதன் பலனாக 3 நாட்களில் ரூ.80 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்தது. இப்போது ரூ.100 கோடியை கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி நக்ஷத்ரா பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். அவருக்கு தற்போது தனுஷ் பாராட்டுத் தெரிவித்துள்ளார். சர்பிரைஸாக வீடியோ கால் மூலம் பேசிய அவர், “எப்போதாவது நாம் சந்தித்தால் உன்னிடமிருந்து நடிப்பு கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்குக் கற்றுக்கொடுப்பாயா? எனக் கேட்டார். அதற்கு வாயடைத்துப் போன நக்ஷத்ரா கண்டிப்பாகக் கற்றுக்கொடுக்கிறேன் எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய தனுஷ், “உன் நடிப்பு மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் நிச்சயம் ஒரு நாள் சந்திப்போம். கிரேட் ஜாப் டா கண்ணா, காட் பிளஸ் யூ” என்றார். இதற்கு நக்ஷத்ரா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். முதலில் ஒரு பெரிய நடிகர் பாராட்டியதை நம்பமுடியாமல் இருந்த நக்ஷத்ரா பின்பு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைமைக்குத் திரும்பினார். அதே போல் தனுஷின் இந்த பாராட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இருமுடி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சபரிமலை ஐயப்ப சுவாமி பின்னணியில் ஆக்ஷன், செண்டிமெண்ட் மற்றும் பக்தி அம்சங்களுடன் கடந்த 21-ம் தேதி வெளியான இப்படம், தமிழில் 'இருமுடி கட்டு' என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படம் வெளியான முதல் 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த வசூல் 100 கோடி ரூபாயை நோக்கி முன்னேறி வருகிறது.