“கர்ப காலத்திலும் கடுமையாக உழைத்தார்...” - வியந்து பாராட்டிய ஹுமா குரேஷி
'கே.ஜி.எஃப்' யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டாக்ஸிக்’. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த மூன்று பேரும் பாடல்களை கவனித்திருக்க பின்னணியை இசையை மட்டும் ரவி பஸ்ரூர் கவனித்திருக்கிறார். இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என இன்னும் பல்வேறு மொழிகளில் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ஹுமா குரேஷி கலந்து கொண்டு பேசுகையில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறேன். இங்கு வருவது எப்போதுமே எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. நான் எங்கு சென்றாலும், பலரும் என்னை ‘கண்ணம்மா’ என்று அழைக்கிறார்கள். ‘டாக்ஸிக்’ என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு அங்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக எனது நேரத்தை செலவிட்டிருக்கிறேன். கீது மோகன்தாஸ் மேடம் இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, கதாபாத்திரம் குறித்து அதிகம் எதையும் சொல்லவில்லை. ‘என்னை நம்பு’ என்று மட்டும் கூறினார். அவர் சொன்னதைப் போலவே ஒரு அசத்தலான படைப்பை கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் பயணத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் கேவிஎன் புரொடக்ஷன் இப்படத்தை மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறது. இந்தப் படத்திற்காக கியாரா அத்வானியின் உழைப்பு அசாதாரணமானது. கர்ப்பமாக இருந்த காலத்திலும் கூட அவர் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். நட்சத்திரங்கள் இருக்கிறார்கள், சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு ‘ராக்கிங் ஸ்டார்’ மட்டுமே இருக்கிறார், அது யஷ் சார். அவர் திரையுலகை உலகளவிலான உயரத்திற்கு கொண்டு செல்கிறார். இந்தப் பிரம்மாண்டமான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறேன்” என்றார்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைக்க, அவரோடு விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ்க் பாக்சி இணைந்து பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.
கர்ப்பகாலத்திலும் நயன்தாரா கடுமையாக உழைத்ததை ஹுமா குரேஷி பாராட்டியுள்ளார். இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.