லண்டனில் தொடங்கிய புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு
நடிகை திரிஷா கடந்த சில நாட்களாக லண்டனில் தங்கியிருந்த நிலையில், அவர் அங்கு சென்றதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தின் பட…

நடிகை திரிஷா கடந்த சில நாட்களாக லண்டனில் தங்கியிருந்த நிலையில், அவர் அங்கு சென்றதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளதே இதற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் திரிஷாவுடன் இணைந்து ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் லோகோமோட்டிவ் குளோபல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.