லண்டனில் தொடங்கிய த்ரிஷா, ராதிகா மற்றும் அபர்ணா நடிக்கும் புதிய சைக்கோ த்ரில்லர் படப்பிடிப்பு
பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் லண்டனில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. டார்க் சைக்கலாஜிக்கல் ஜானர…

பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் லண்டனில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. டார்க் சைக்கலாஜிக்கல் ஜானரில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் த்ரிஷா, ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் மூலம் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழ் திரையுலகில் தனது தயாரிப்பு பயணத்தை முதன்முதலாகத் தொடங்கியுள்ளது.