PulseNews
சினிமா

பாரதிராஜாவுக்கு தேனியில் மணி மண்டபம் கட்டப்படும் - அமைச்சர் ராஜ் மோகன் அறிவிப்பு

மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின், திரைத்துறை பங்களிப்பையும் கலைச் சேவையையும் போற்றும் வகையில், அவரது சொந்த மாவட்டமான தேனியில் அரசு சார்பில் பிரம்மாண்ட மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில்,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுகிற்கு எடுத்துச் சென்றவர் பாரதிராஜா. 1977-ம் ஆண்டு வெளியாக 16 வயதினிலே படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அவர், அதன்பிறகு கிழக்கே போகும் ரயில், டிக் டிக் டிக், கடலோர கவிதைகள், மண் வாசனை, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல மெகாஹிட் படங்களை கொடுத்துள்ளார். தேசிய விருதுகள் மற்றும் மாநில விருதுகள் என பல்வேறு விருதுகளை வென்றுள்ள பாரதிராஜா நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார். இதனிடையே வயது மூப்பு மற்றும் உடல்நிலை பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா கடந்த ஜூன் 10-ந் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பின்படி, பாரதிராஜாவின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அவர், தமிழ் சினிமா வரலாற்றில் கிராமத்து வாழ்வியலையும் மனித உறவுகளையும் உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியதில் இயக்குநர் பாரதிராஜாவிற்கு முக்கியப் பங்குண்டு. அவரது கலை சாதனைகளை என்றென்றும் நினைவுகூரும் வகையில், தேனி மாவட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அதிநவீன அம்சங்களுடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியீடு மற்றும் முதற்கட்ட பணிகள் விரைவுபடுத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்த மணி மண்டபத்தில், பாரதிராஜாவின் உருவச்சிலை, அவரது திரைப்பயண சாதனைகளை விளக்கும் புகைப்படக் கூடம் மற்றும் கலைப் பொருட்கள் இடம்பெறவுள்ள நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு, சினிமா ரசிகர்கள், கலை உலகத்தினர் மற்றும் தென் தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பாரதிராஜாவுக்கு தேனியில் மணி மண்டபம் கட்டப்படும் - அமைச்சர் ராஜ் மோகன் அறிவிப்பு
PulseNews சுருக்கம்

திரைத்துறை மற்றும் கலைச் சேவைக்கு இயக்குனர் பாரதிராஜா ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது சொந்த மாவட்டமான தேனியில் அரசு சார்பில் பிரம்மாண்ட மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ் மோகன் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்த பெருமைக்குரிய பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், டிக் டிக் டிக் உள்ளிட்ட பல படங்களை அவர் இயக்கியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema