படத்தில் ஆண், நிஜத்தில் பெண்; சூர்யவம்சம் படத்தில் சரத்குமார் மகன்: இந்த நடிகை இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?
90களில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள், தற்போது வளர்ந்து பெரியவர்களாக ஆகிவிட்டாலும், இவர்கள் குழந்தை நட்சத்தரமாக நடித்த கேரக்டர்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றிக்கும். அந்த வகையில், சூர்ய வம்சம் படத்தில் சரத்குமாரின் மகன் ஜுனியர் சக்திவேல் கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? கடந்த 1997-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான படம் சூர்ய வம்சம். சரத்குமார், ராதிகா, தேவயானி, பிரியா ராமன், மணிவண்ணன், சுந்தர்ராஜன், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் ஜூனியர் சக்திவேல் கவுண்டர் கேரக்டரில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தவர் நடிகை ஹேமலதா. பெண்ணான இவர், சூர்யவம்சம் படத்தில் ஆண் குழந்தையாக நடித்து அசத்தியிருப்பார். 1995-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்சா படத்தில் ரகுவரனின் மகளாக நடித்து திரைத்துறையில் அறிமுகமான ஹேமலதா, விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மதுர, திமிரு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஹேமலதா, கடைசியாக பிரஷாந்த் நடிப்பில் வெளியான அடைக்கலம் என்ற படத்தில் நடித்திருந்தார். 1999-ம் ஆண்டு ராதிகா நடிப்பில் வெளியாகி இன்றுவரை பாராட்டுக்களை பெற்று வரும் சித்தி தொடரின் மூலம் சின்ன்த்திரையில் அறிமுகமான ஹேமலதா, மனைவி, கனா காணும் காலங்கள், மகள், அன்பே வா, தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு முடிவடைந்த முந்தானை முடிச்சு என்ற சீரியலில் நடித்திருந்தார். அதன்பிறகு சின்னத்திரையில் இருந்து விலகிய ஹேமலதா, தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். View this post on Instagram A post shared by Hemalatha s (@suryavamsam_hemalatha) சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, தனது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கிளிப்பில், ஹேமலதா ஒரு பொருள் குறித்து விளம்பரமும் செய்துள்ளார். மேலும், சூரியவம்சம் படத்தில் இவர் யானை மீது வரும் காட்சியை டிவியில் பார்த்து, நிஜத்திலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

1997-ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'சூர்யவம்சம்' திரைப்படத்தில், சரத்குமாரின் மகனாக ஜூனியர் சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். அந்தப் படத்தில் சிறுவனாக நடித்தவர் உண்மையில் ஒரு பெண் என்பது பலருக்கும் ஆச்சரியமான தகவலாகும்.
திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமானவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டாலும், அவர்கள் நடித்த கதாபாத்திரங்கள் இன்னும் ரசிகர்களின் நினைவில் நீங்காமல் உள்ளன. அந்த வகையில், சூர்யவம்சம் படத்தில் நடித்த அந்த குழந்தை நட்சத்திரம் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன.