PulseNews
சினிமா

டூரிங் டாக்கீஸ்!

பெண் மைய கதாபாத்திரம்! தெலுங்கு சினிமாவில் பெண் கதாபாத்தி ரத்தை மையமாகக் கொண்ட படங்களில் முக்கியத் துவம் தந்து நடிப்பதில் தற்போதைய நடிகைகள் கவனம் செலுத்திவருகிறார்கள். சமந்தா ரூத் பிரபு, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், அஞ்சலி, தமன்னா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரைத் தொடர்ந்து, நிதி அகர்வால் இந்த பட்டியலில் சேருகிறார். வரஹ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஸ்ரீனிவாஸ் கோபிசெட்டி இயக்கத்தில் உருவாகும் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரில்லர் படத்தில் நாயகியை மையமிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து நிதி அகர்வால் கூறுகையில், "தெலுங்கு கமர்ஷியல் சினிமாக்கள் ஆண்களை மையப்படுத்தப்பட்டே இயங்கு கிறது. ஆனால், சில இயக்கு நர்கள் பெண்களை மையமாக வைத்து கதாபாத்திரங்களை உருவாக்கி, அந்த கதையை வெற்றிபெறச் செய்கின்றனர். அப்படியான படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது''” என்றிருக்கிறார். பிரம்மாண்ட கூட்டணி! இயக்குநர் சுகுமார் -ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படமான "ஆர்.சி. 17'’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இந்த கூட்டணி "ரங்கஸ்தலம்'’ என்ற ஹிட் படத்தை தந்திருந்தது. அதனாலேயே இந்த படத்தில் நடிக்க வேண்டுமென சில நடிகைகள் தானாகவே தூதுவிட்டிருக்கிறார் கள். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், தனது நடிப்புத் திறமையால் பல மொழிகளில் பணியாற்றி வந்தார். இந்தியில் வெளியான ‘"துரந்தர்'’ படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் மிகப்பெரும் வெற்றியைத் தொடர்ந்து பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். அவரைத்தான் தற்போது இக்கூட்டணி முடிவெடுத்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திருக்கிறார்கள். நடிகரின் விமர்சனம்! தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்.வி. எண்டர்டெயின்மெண்ட் வெங்கல் எம்.லிங்கேஸ் வரன் இணைந்து தயாரிக்கும் "பாரிஸ் கஃபே'’படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் குருசோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். சராஜ் சீலன் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடை பெற்றது. நிகழ்வில் இப்படத்தில் நடித்த நடிகர் விஜயவிஷ்வா படத்திற்கு சம்பந்தமில்லாத அரசியல் கருத்துக்களை பேசியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இளம் வில்லன்! ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘"தர்மன்' படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவாக நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயத்தில் பல பெரிய நடிகர்களின் பெயர்கள் பேசப்பட்டது. இறுதியாக தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி வில்லனாக நடிக்கவுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் நாயகனாக வலம் வருகிறவர், ரஜினி காந்த்துடன் நடித்தால் பெரிய மார்க்கெட்டை பிடிக்கலாம் என்று இந்த வாய்ப்பை ஏற்றுள்ளாராம். ஹாலிவுட் டூ கோலிவுட்! இயக்குநர் அட்லீ தற்போது அல்லு அர்ஜுனை வைத்து ‘"ராக்கா'’ என்னும் தலைப்பில் ஒரு படம் இயக்கிவருகிறார். தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளங்களும் நடிக்கிறார்கள். குறிப்பாக ராஷ்மிகா மந்தனா ஒரு நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். சைன்ஸ் பிக்சன் மற்றும் ஃபேண்டஸி கலந்த ஜானரில் உருவாகுவதாகச் சொல்லப்படும் இப்படம் ஒன்பது மொழிகளில் உருவாகியிருக் கிறது. மற்றுமொரு நெகட்டிவ் ரோலில் முதலில் விஜய் சேதுபதி, பிறகு ஷாருக் கான் நடிப்பதாக இருந்தது. தற்போது அதில் ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டூரிங் டாக்கீஸ்!
PulseNews சுருக்கம்

தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகள் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமந்தா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், அஞ்சலி, தமன்னா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரின் வரிசையில் தற்போது நிதி அகர்வால் இணைந்துள்ளார்.

வரஹ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஸ்ரீனிவாஸ் கோபிசெட்டி இயக்கும் புராணக் கதையை மையமாகக் கொண்ட திரில்லர் படத்தில் நிதி அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema