ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன்
நடிகை, கூத்து கலைஞர், மேடை நாடகக் கலைஞர், யூட்யூப் பிரபலம் எனப் பன்முகத் திறமையுடன் வலம் வரும் மாயா எஸ். கிருஷ்ணன், தற்போது ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். சென்னை மியூசிக் அகாடமியில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை நடைபெற்ற அவரது ‘பொம்ப்ளேள்’ ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ, இதற்கு சாட்சியாக அமைந்தது. குறிப்பாக, 1,500 இருக்கைகள் கொண்ட அரங்கம் நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக விற்றுத் தீர்ந்த [...]
நடிகை, கூத்து கலைஞர் மற்றும் யூடியூப் பிரபலம் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மாயா எஸ். கிருஷ்ணன், தற்போது ஸ்டாண்ட் அப் காமெடி துறையிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை சென்னை மியூசிக் அகாடமியில் அவரது ‘பொம்பளேள்’ என்ற ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பு வியக்கத்தக்க வகையில் இருந்தது. 1,500 இருக்கைகள் கொண்ட இந்த அரங்கத்தின் அனைத்து டிக்கெட்டுகளும் நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.