டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’
திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறும் கதையில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணைய, ரக்ஷன், நம்ரிதா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக ‘மேரிகோல்ட்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளர் ஆவார். திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறும் விறுவிறுப்பான கதையான இதில் ‘செந்தமிழ்ப் பாட்டு’, ‘சின்ன மாப்ளே’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு [...]
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது திரைப்படமாக ‘மேரிகோல்ட்’ படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிப்பில், சுதர்சன் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான கதையில், 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு மற்றும் சுகன்யா மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் ரக்ஷன் மற்றும் நம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.