பாரதிராஜா திட்டுறாரு, சுந்தர்ராஜன் கண்டுக்கவே இல்ல; இளையராஜா ஸ்டூடியோவில் நடந்த சம்பவம்: பாக்யராஜ் த்ரோபேக் வீடியோ
இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்டவர் பாக்யராஜ். சமீபத்தில் நடந்த அவரது மரணம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருடன் பணியாற்றிய பலரும் அவரது நினைவுகள் மற்றும் பழைய வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தனது நெருங்கிய நண்பரும் இயக்குனருமான சுந்தர்ராஜன் குறித்து பாக்யராஜ் பேசிய பழைய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 1979-ம் ஆண்டு வெளியான சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாக்யராஜ். அதன்பிறகு பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறிய நிலையில், இவர் அறிமுகமாகி 3 ஆண்டுகள் கழித்து 1982-ம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சுந்தர்ராஜன். நெருங்கிய நண்பர்களாக இருந்த சுந்தர்ராஜன் பாக்யராஜ் இருவரும் இயக்குனர் ஆக வேண்டும் என்று சென்னைக்கு வந்துள்ளனர். ஒரே இடத்தில் தங்கி வாய்ப்பு தேடிய நிலையில், பாக்யராஜ் பாரதிராஜாவிடம் உதவியாளராக இணைந்துள்ளார். அதன்பிறகு அவரே இயக்குனர் ஆகிவிட்ட நிலையில், இரட்டை இயக்குனர்கள் ஆக வேண்டும் என்று நினைத்திருந்த சுந்தர்ராஜன் அதன்பிறகு தனியாக வாய்ப்பு தேட தொடங்கி இயக்குனராக ஆகியுள்ளார். இயக்குனர் ஆவதற்கு முன்பு, இளையராஜாவை பார்க்க வேண்டும் என்று விடாபிடியாக பாக்யராஜூவிடம் கேட்டு அவருடன் சென்று பார்த்தவர் சுந்தர்ராஜன். அதே சமயம் பின்னாளில், இளையராஜா இசையமைத்த 7 பாடல்களுக்காக ஒரு கதையை (வைதேகி காந்திருந்தாள்) உருவாக்கி அதை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியவர். பழைய வீடியோ ஒன்றில் சுந்தர்ராஜன் குறித்து பேசியுள்ள பாக்யராஜ், சுந்தர்ராஜனும் நானும் நெருங்கிய நண்பர்கள், அவனுக்கு பாடல்கள் மிகவும் பிடிக்கும். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்றால், அவன் அதிக நேரம் பாடல் தான் பாடிக்கொண்டிருப்பான். ஒருநாள் இளையராஜாவை பார்த்து ஆக வேண்டும் என்று இடம் பிடித்ததால் அழைத்து சென்றேன். View this post on Instagram A post shared by மாண்புமிகு மக்கள் (@tamilpeople_offl) 16 வயதினிலே நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், நாங்கள் இருவரும் இளையராஜா அறைக்கு சென்றுவிட்டோம். அவர் வாசித்துக்கொண்டிருக்க, இவன் அவரையே மெய் மறந்து பார்த்துக்கொண்டு இருந்தான். அப்போது திடீரென பாரதிராஜா சார் வந்துவிட்டார். அவர் இவனை பார்த்து யார் இவன் என்று கேட்க, என் நண்பன் இளையராஜாவை பார்க்க வேண்டும் என்று சொன்னதால் அழைத்து வந்தேன் என்று சொல்ல, நான் கதை சொல்லிக்கொண்டு இருப்பேன நீ யார் யாரையோ அழைத்து வந்து உட்கார வைப்பாயா? முதலில் நீ வெளியே போ என்று சொல்லிவிட்டார். அவர் என்னை அந்த அளவுக்கு திட்டுவது கூட தெரியாமல், சுந்தர்ராஜன் இளையராஜாவையே மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். இளையராஜாவும் வாசித்துக்கொண்டே இருந்தார். அதன்பிறகு பாரதிராஜாவிடம் பேசி அவனை உள்ளே இருக்க அனுமதி வாங்கினேன். பாட்டு சாப்பாடு இரண்டும் சுந்தர்ராஜனுக்கு மிகவும் பிடித்தது என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.

திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்ட பாக்யராஜ், இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பழைய வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். இதில் பாரதிராஜா சுந்தர்ராஜனைத் திட்டியபோதும், அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அமைதியாக இருந்த நிகழ்வை பாக்யராஜ் விவரித்துள்ளார்.
பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தனது நண்பரான இயக்குனர் சுந்தர்ராஜன் குறித்துப் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 1979-ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்யராஜின் பழைய நினைவுகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.