PulseNews
சினிமா

ரஜினியை பார்த்தவுடன் கயாடு லோஹருக்கு ஒலித்த பாடல்!

தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வரும் கயாடு லோஹர் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். கைவசம் மஞ்சணத்தி, சூர்யா 48 உள்ளிட்ட பல்வேறு படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “நான் இன்னும் கனவில் இருக்கிறேனோ எனத் தோன்றுகிறது. ரஜினியின் தீவிர ரசிகையாக இருந்து, ஒரு விமானப் பயணத்தில் அவருக்கு அருகில் அமரும் வாய்ப்பு கிடைத்தது... இதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்த அந்தத் தருணத்தில், என் மனதில் 'சுந்தரி' பாடல் ஒலிக்கத் தொடங்கியது. நான் அப்படியே ஒரு கனவுலகில் மிதக்கத் தொடங்கினேன். எவ்வளவு ஒரு அற்புதமான, எதிர்பாராத தருணம். என் நாளே இனிதாகிவிட்டது. என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரஜினியை பார்த்தவுடன் கயாடு லோஹருக்கு ஒலித்த பாடல்!
PulseNews சுருக்கம்

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் கயாடு லோஹர், தற்போது மஞ்சணத்தி மற்றும் சூர்யா 48 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமான பயணத்தின் போது சந்தித்த அனுபவத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரஜினியின் தீவிர ரசிகையான தான், விமானத்தில் அவருக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அந்த தருணத்தை இன்னும் ஒரு கனவு போல உணர்வதாகவும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema