அரசியலில் நுழையும் திட்டமா? - ரவி மோகன் கொடுத்த பதில்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் ரவி மோகன் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் ரவி மோகன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்பு மேடையில் பேசும் போது, “ரசிகர்களின் ஒரு சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. இனி வரும் காலங்களில் கட்டாயமாக பங்கேற்பேன். வருகின்ற 25ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எனது பிறந்தநாள் விழாவில் ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்” என்றார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். திரைப்படங்கள் குறித்து பேசிய அவர், “தனி ஒருவன் 2-வின் கதை முடியும் தருவாயில் இருக்கிறது. மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். கராத்தே பாபு படம் மிக விரைவில் திரைக்கு வர உள்ளது. இனிவரும் காலங்களில் தொடர்ந்து படங்களில் நடிப்பேன்” என்றார். அடுத்து அரசியல் வருகை குறித்தான கேள்விக்கு பதிலளிக்கையில், “நல்லது செய்ய வேண்டுமென்றால் எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். வந்து செய்யலாம் வராமலும் செய்யலாம். நல்லது செய்ய ஆர்வம் உள்ளவர்கள் அரசியலுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த ஆர்வத்தோடு வந்தால் தவறே கிடையாது” என்றார். நடிகராக இருந்து தற்போது அரசியலில் வெற்றிபெற்றுள்ள நிலையில் முதல்வர் விஜய் போல் அடுத்தடுத்த நடிகர்கள் அரசியலில் நுழைவார்களோ என்ற கேள்வி திரை வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற் போல் தனுஷ், விஷால் தங்களது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் ரவி மோகனும் ரசிகர்களை ஒருங்கிணைத்து பார்க்கவுள்ள சூழலில் இவர்மீதும் அரசியல் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அவர் தற்போது விளக்கம் கொடுத்திருந்தாலும் சென்னையில் நடக்கும் பிறந்தநாள் விழா அன்று விரிவாக எதாவது பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரனின் திருமண விழாவில் நடிகர் ரவி மோகன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது மேடையில் பேசிய அவர், ரசிகர்களின் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலாத சூழல் இனி இருக்காது என்றும், வரும் 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள தனது பிறந்தநாள் விழாவில் ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகனிடம், அரசியலில் நுழையும் திட்டம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர் அளிக்கும் பதில்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் கலந்துரையாடினார்.