தயாரிப்பாளர் சங்க போராட்டம்; 'அரசு தலையிட வேண்டும்': ஆர்.கே.செல்வமணி கோரிக்கை
புதிதாக வெளியாகும் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகே, ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை மற்றும் புதிய படங்களில் படப்பிடிப்பு தொடங்குவதில்லை என்று அறிவித்துள்ளது, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற யுவர் பேக்கர்ஸ் ப்ளே என்ற ஒ.டி.டி தளத்தின் தொடங்க விழாவில் பேசிய ஆர்.கே.செல்வமணி கூறுகையில், ஒ.டி.டி-யும் ஒரு தியேட்டர் தான். ஆரம்பத்தில் சினிமாவிற்கு பலம் சேர்க்கும் ஒரு கருவி போல் வந்தது. இப்போது சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது. முன்பு போட்டி போட்டு படத்தை வாங்கிய ஒ.டி.டி நிறுவனங்கள் இப்போது படத்தை வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். மேலும் தங்கள் வாங்கும் படங்களுக்கு அவர்கள் தான் ரிலீஸ் தேதியை முடிவு செய்கிறார்கள். ஹீரோக்களால் கூட இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியவில்லை. தமிழ் சினிமா அப்படி ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறது. இதன் காரணமாக சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் முடங்கி போய் கிடக்கின்றன. இந்த சூழலில் தமிழில் ஒரு ஓ.டி.டி நிறுவனம் தொடங்கியதை வரவேற்கிறேன். குறிப்பாக படத்தின் லாபத்தில் 20 சதவீதம் சினிமா தொழிலாளர்களுக்கு அளிப்பதாக கொடுத்துள்ள அறிவிப்பை வரவேற்கிறேன் என்று பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண வேண்டும். செப்.1 முதல் திரைப்பட பணிகள் நிறுத்தப்பட்டால் கடும் பாதிப்பு ஏற்படும். படப்படிப்பு நிறுத்தப்பட்டால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். தமிழக அரசு தலையிட்டு பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், அதேபோல், திரைப்படத் துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள தயாரிப்பாளர் சங்கம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளையும் நடத்துவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக வெளியாகும் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதற்காக வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்புகளை நிறுத்துவதாகவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார்.