PulseNews
சினிமா

ஜெயிலர் 2 ஓவர், அடுத்து தர்மன் ஷூட்டிங்கில் பிஸி: கமல் படம் குறித்த அப்டேட் சொன்ன ரஜினிகாந்த்

‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகவும், தனது அடுத்த படமான ‘தர்மன்’ தற்போது படப்பிடிப்பில் இருப்பதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெரிவித்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் அவரது படப்பிடிப்பு அட்டவணை குறித்தும், புதிய படங்களில் ஏதேனும் ஒப்பந்தமாகியுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு சுருக்கமாக பதில் அளித்த அவர், “ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தர்மன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கமல் படத்தை தயாரிக்கிறார். நாங்கள் இருவரும் இணைந்து ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறோம். அவ்வளவுதான்” என்று பதிலளித்தார். 2023ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தின் 2-ம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், தயாரிப்பில் இருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்ணா, யோகி பாபு மற்றும் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் மீண்டும் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜதின் சர்னா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட புதிய நடிகர்களும் இணைந்துள்ளனர். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் உள்ளது. இப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்தின் அடுத்த படமான ‘தர்மன்’ தற்போது 2-வது கட்ட படப்பிடிப்பில் உள்ளது. ‘டிராகன்’ திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கேரக்டரில் நடிக்கிறார். சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். ‘ஜெயிலர்’, ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, மீண்டும் அனிருத் ரவிச்சந்தரே இப்படத்திற்கும் இசையமைக்கிறார். We heard you !! Ithan hair styleu !! Ithan looku ! Sexy work @kabilanchelliah ❤️ pic.twitter.com/mW8vmkYeeX — Ashwath Marimuthu (@Dir_Ashwath) June 25, 2026 ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படத்தையும் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த இரு முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணி இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நட்சத்திரங்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். 1970களின் பிற்பகுதியிலும் 1980களின் தொடக்கத்திலும் இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 1975 முதல் 1985ஆம் ஆண்டு வரை, ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் சுமார் 21 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதில் ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘16 வயதினிலே’, ‘அவள் அப்படித்தான்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘தப்பு தாளங்கள்’, ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’, ‘தில்லு முல்லு’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடித்த கடைசி படம் க்ரெப்டார் (‘Geraftaar’ (1985) ஆகும். பிரயாக் ராஜ் இயக்கிய இந்த இந்தி திரைப்படத்தில் அமிதாப் பச்சனும் நடித்திருந்தார். அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படங்களில் ஒன்றாக இது இருந்தது. மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய மூன்று முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. அதன்பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் திரை கூட்டணி தொடரவில்லை. அவர்களது கூட்டணி எந்தவித பரபரப்பான முடிவுமின்றி, ஆனால் உறுதியான முறையில் முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியான ‘கமல் – ரஜினி படத்தின் புரோமோ வீடியோவில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் உற்சாகமாக உரையாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. நெல்சனின் தனித்துவமான திரைப்பட உருவாக்க பாணியில் உருவாக்கப்பட்ட அந்த புரோமோ, இறுதியில் ரஜினிகாந்தின் வழக்கமான ஸ்டைலான தருணத்துடன் நிறைவடைந்தது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஜெயிலர் 2 ஓவர், அடுத்து தர்மன் ஷூட்டிங்கில் பிஸி: கமல் படம் குறித்த அப்டேட் சொன்ன ரஜினிகாந்த்
PulseNews சுருக்கம்

'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தற்போது தனது அடுத்த திரைப்படமான 'தர்மன்' படப்பிடிப்பில் அவர் பிஸியாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்கள் அவரிடம் படப்பிடிப்பு அட்டவணை மற்றும் புதிய படங்கள் குறித்த விவரங்களை கேட்டபோது, ரஜினிகாந்த் மேற்கண்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இதன்போது கமல்ஹாசன் படம் குறித்த சில தகவல்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema