டிஜிட்டல் பேமெண்ட்டில் இருந்து பின்வாங்கும் மக்கள்! ரொக்கத்திற்கு திரும்பக் காரணம் என்ன?

ஆன்லைன் டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் அதிகரித்ததில் இருந்து மக்கள் பெட்டிக்கடை தொடங்கி தியேட்டர் வரை எல்லா இடங்களிலும் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி வந்தனர். ஆனால் இப்போது எந்தெந்த இடங்களில் எந்த பேமெண்ட் வசதியாக இருக்கிறதோ அதை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகின்றனர். முன்பு எல்லாவற்றுக்கும் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி வந்தவர்களும் இப்போது பழையபடி நேரில் பணம் செலுத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு வரை கரண்ட் பில், போன் பில் போன்றவற்றை கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் மூலமாக கட்டி வந்த மக்கள். தற்போது மீண்டும் நேரில் பணம் கொடுத்து கட்டி வருகின்றனர். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றிற்கும் நேரில் பணம் தருவதையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் இன்னமும் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும், கடன் செலுத்துவதற்கும் டிஜிட்டல் பேமெண்ட் தளங்களை பயன்படுத்தி தெரிகிறது. 2025-ஆம் ஆண்டில் 43 சதவீதத்தினர் மட்டுமே நேரில் போய் பில் செலுத்தி வந்தனர். 54 சதவீதம் பேர் ஆன்லைன் மூலமாக பில் கட்டினர். ஆனால் 2026 ஆம் ஆண்டில் இந்த நிலை அப்படியே மாறிவிட்டது. 59 சதவீதத்தினர் நேரில் போய் பில் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ஆன்லைன் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை 39 சதவீதமாக குறைந்துவிட்டது.

சில நேரங்களில் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் போது பணம் டெபிட் ஆகிவிடும். ஆனால் பில் கட்டப்படாதது போல் காண்பிக்கப்படும். அதோடு ஜிஎஸ்டி வரி மற்றும் சில கூடுதல் கட்டணங்கள் இருக்குமோ என்ற பயத்தினாலும் மக்கள் நேரில் போய் பணம் செலுத்தி ரெசிப்ட் வாங்கினால் தான் நிம்மதி என்று நினைக்கத் தொடங்கி விட்டனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பெல்லாம் உணவகத்தில் சாப்பிட்டாலோ அல்லது பார்சல் வாங்கினாலோ 59 சதவீதத்தினர் மட்டுமே நேரில் பணம் கொடுத்து வந்தனர். ஆனால் 2026-ஆம் ஆண்டில் இந்த விகிதம் 73 சதவீதமாக அதிகரித்துள்ளது. பஸ் டிக்கெட் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு 58 சதவீதத்தினர் மட்டுமே நேரில் பணம் செலுத்தி வந்தனர். 2026 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 72 சதவீதமாக மாறியுள்ளது. அது மட்டுமா மளிகை பொருட்கள் மருந்து கடைகள் என பிற இடங்களிலும் ஆஃப்லைன் பரிவர்த்தனையே மக்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக டிஜிட்டல் பேமெண்ட் செய்வதை மக்கள் முழுமையாக ஒதுக்கவில்லை என்றாலும்.. எந்தெந்த இடத்திற்கு எந்தெந்த பேமெண்ட் வசதியாக இருக்கிறதோ அதையே பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒரு சில இடங்களில் நேரடியாக பணம் கொடுக்கும் முறை பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கின்றனர். மேலும் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப கவனமாக பேமெண்ட் முறையை தேர்வு செய்து பணம் செலுத்தி வருகின்றனர்.
Source: Read Full Article
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளங்கள் பெருகிய காலத்தில், பெட்டிக்கடைகள் முதல் திரையரங்குகள் வரை அனைத்து இடங்களிலும் மக்கள் ஆன்லைன் மூலமாகவே பணத்தை செலுத்தி வந்தனர். ஆனால் தற்போதைய சூழலில், பணப் பரிவர்த்தனைக்கு எந்த முறை வசதியாக இருக்கிறதோ, அதைத் தேர்ந்தெடுத்து மக்கள் செயல்படுகின்றனர்.
முன்பு அனைத்துத் தேவைகளுக்கும் டிஜிட்டல் முறையை மட்டுமே பயன்படுத்தி வந்தவர்கள், தற்போது மீண்டும் ரொக்கப் பணத்தைச் செலுத்தும் முறைக்கு மாறி வருகின்றனர். இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இருந்து மக்கள் சற்று பின்வாங்கி வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது.