PulseNews
சினிமா

“நல்ல வேலை நீங்க அந்த படத்துல நடிக்கல” - கியாரா அத்வானியை கலாய்த்த விக்னேஷ் சிவன்

'கே.ஜி.எஃப்' யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டாக்ஸிக்’. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த மூன்று பேரும் பாடல்களை கவனித்திருக்க பின்னணியை இசையை மட்டும் ரவி பஸ்ரூர் கவனித்திருக்கிறார். இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என இன்னும் பல்வேறு மொழிகளில் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “நான் யஷ் சாரின் ரசிகன். ரசிகன் என்பதை விட அவர் எனக்கு ஒரு ஐகான். முதலில் இப்படத்திற்காக ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இன்னொரு பாடலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தமாக இப்படத்திற்காக மூன்று பாடல்களை எழுதியுள்ளேன். அதற்காக யஷ்ஷுடன் பயணித்த நாட்கள் மறக்க முடியாதது. ஒரு முறை குஜராத் சென்ற போது ஒரு கடையில் இருக்கும் சிறுவன் யஷ்ஷின் புகைப்படத்தை ஒட்டியிருந்தான். அது குறித்து கேட்ட போது ‘ராக்கி பாய், ராக்கி பாய்’ என உற்சாகமடைந்தான். யஷ்ஷுக்கு இந்தியா முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். டாக்ஸிக் திரைப்படத்தின் மூலம் அவரது புகழ் உலகளவில் இன்னும் பெரிய அளவில் சென்றடையும் என்று நம்புகிறேன். வெங்கட் சார் நமது முதல்வர் விஜய் சாரின் ஜனநாயகன் படத்தை தயாரிக்கும்போது பல்வேறு சவால்களையும் போராட்டங்களையும் எதிர்கொண்டார். படம் ஆன்லைனில் கசிந்தபோதும் அவர் மிகவும் உறுதியுடன் இருந்தார். தமிழக மக்கள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த படத்திற்கு அந்த அன்பை திருப்பி கொடுப்பார்கள். கீதுமோகன்தாஸ் மேம் எனக்கு குடும்ப நண்பர் போன்றவர். இப்படத்தை உருவாக்க உங்களிடம் இருந்த தைரியமும் துணிச்சலும் அளப்பரியது. கியாரா அத்வானியை கபீர் சிங் படத்திற்கு முன்பு சந்தித்திருக்கிறேன். அப்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்காக கதை சொல்ல போயிருந்தேன். நல்ல வேலை நீங்க அந்த படத்தில் நடிக்கவில்லை. நீங்க ரொம்ப லக்கி” என்றார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“நல்ல வேலை நீங்க அந்த படத்துல நடிக்கல” - கியாரா அத்வானியை கலாய்த்த விக்னேஷ் சிவன்
PulseNews சுருக்கம்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ்க் பாக்சி ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

பாடல்களை மற்றவர்கள் கவனிக்க, பின்னணி இசையை ரவி பஸ்ரூர் கையாண்டுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே, கியாரா அத்வானியை விக்னேஷ் சிவன் நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema