PulseNews
சினிமா

சின்னத் திரையில் ஏ.ஆர்.ரஹ்மான்; பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்துள்ளார். இவர் உலக அளவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராகவும் அறியப்படுகிறார். இவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்றுள்ளார். இவ்வாறு உலக அளவில் புகழ் பெற்ற இவர், திரைப்படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த நிலையில், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருக்கிறார். தமிழ் தொலைக்காட்சியில் ’சோனி’ நிறுவனம் தன்னுடைய ’சோனி விழா’ என்ற புதிய சேனலை தொடங்கவுள்ளது. இதன் முதல் நிகழ்ச்சியாக ’மாஸ்டர் செஃப்’ என்கிற சமையல் நிகழ்ச்சிக்கான டீசர் வெளியானது. இந்நிலையில், அந்த சேனலில் ’தமிழ் ஐடல்’ என்கிற இசைதிறமைக்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏ.ஆர். ரஹ்மான் நடுவராகப் பங்கேற்க உள்ளார். இதுவரை, இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காத இவர், தற்போது முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சேனல் வருகின்ற தீபாவளி அன்று அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சின்னத் திரையில் ஏ.ஆர்.ரஹ்மான்; பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
PulseNews சுருக்கம்

திரையுலகில் பல மொழிகளில் இசையமைத்து, இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், முதன்முறையாகச் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். திரைப்படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த அவர், தற்போது தொலைக்காட்சியிலும் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.

சோனி நிறுவனம் புதிதாகத் தொடங்கவுள்ள ’சோனி விழா’ என்ற தொலைக்காட்சியின் முதல் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொள்ளவிருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema