சூர்யா இப்படி செய்யலாமா?மன்சூர் அலிகான் ஆத்திரம் “ஏன் மண் அள்ளி போடுறீங்க?”வெடித்து சிதறிய பின்னணி!
'கருப்பு' படத்தின் வெற்றிக்குப் பிறகு சில மாத இடைவெளியில் நடிகர் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'லக்கி பாஸ்கர்' போன்ற ஃபீல்-குட் திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தநிலையில்தான், சூர்யாவையும் ஆர்.ஜே. பாலாஜியையும் மன்சூர் அலிகான்வெளுத்தெடுத்த விவகாரம், சமூக வலைதளங்களில் விவாதம் ஆகியுள்ளது. மேலும் சூர்யா குடும்பத்தினரை குறிப்பிட்டு எங்கங்கேயோ சொத்துகளை வாங்கிப்போடுங்கள். ‘அகரம் ஃபவுண்டேஷன்’ மூலம் நல்ல பேர் எடுங்கள். ஆனால், ஒரு நடிகனை கொச்சைப்படுத்தாதீர்கள் என சூர்யாவை நேரடி அட்டாக் செய்தததுதான் பேசுபொருள் ஆகியுள்ளது. மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மன்சூர் அலிகான், குமுறல் பேச்சால் வெடித்து சிதற ஆரம்பித்தார். “சினிமா என்பது ஒரு சிலரின் சொந்தச் சொத்து அல்ல. அது நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பால் உருவான ஒரு கூட்டுக்குடும்பம். இன்று பல திரைப்படங்களின் (Posters), விளம்பரங்களிலும் கதாநாயகர்களின் பெயர்கள் மட்டுமே பிரம்மாண்டமாகப் போடப்படுகின்றன. ஆனால், அந்தப் படம் வெற்றிபெற உழைத்த ஒளிப்பதிவாளர், எடிட்டர், கலை இயக்குனர், பாடலாசிரியர்கள் மற்றும் துணை நடிகர்களின் பெயர்கள் எங்கு இருக்கின்றன என்றுகூடத் தெரியாத அளவுக்கு மிகச் சிறிய எழுத்துகளில் ஓரம் கட்டப்படுகின்றன. ஆர்.ஜே.பாலாஜி சொல்லி ‘கருப்பு’ படத்தில் க்ளைமாக்ஸில் டான்ஸ் நான் ஆடினேன். ரொம்ப கஷ்டப்பட்டு ரிங்கில் நின்று ஆடியிருந்தேன். அதையெல்லாம் ஷூட்டிங்கில் மகன்கள் பார்த்திருந்தார்கள். ஆனால், டத்தில் அந்த டான்ஸ் காட்சி இடம்பெறவில்லை. என் மகன்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு ‘நாம் என்னப்பா பண்ண முடியும்?’ என அவர்களிடம் சொன்னேன். என்ன அநியாயம் இது? எனக்கு நீங்கள் எந்த கதாபாத்திரத்தையும் கொடுக்க வேண்டாம். ஆனால், அதை ஏன் இருட்டடிப்பு செய்கிறீர்கள்? நான் கஷ்டப்பட்டு ஆடினேன். அது படத்தில் இல்லை. யூடியூப்பில் வரும் என்றார்கள். ஆனால் வரவில்லை. என் மகன்கள் என்னை கேட்கிறார்கள்? நான் அவர்களிடம் என்ன பதில் சொல்வது?” என கேள்வி எழுப்பினார். மேலும் டென்ஷன் ஆனவர், “ஒரு நடிகரின் பங்களிப்பில், ஏன் மண் அள்ளி போடுகிறீர்கள்? 350 படங்களில் நடித்துள்ளேன். எதற்கு என் காட்சியை இருட்டடிப்பு செய்தீர்கள்? நூற்றுக்கணக்கான ஊழியர்களில் உழைப்பில் தான் நீங்கள் பிரபலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சூர்யாவுக்கு 1500 ஷாட் பில்டப் கொடுக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. என்னை டம்மியாக நிற்க வைத்திருக்கிறார் எனவும் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார். நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், அந்த பாடலை யூட்யூபிலாவது போடுங்கள். இந்த படத்தின் தயாரிப்பாளரிடம கேட்டால், நாங்கள் ஆடியோ கம்பெனிக்கு விற்று விட்டோம் என்று கூறுகிறார்கள். இது என்ன பொறுப்பில்லாத பதில்? இவர்களெல்லாம் கேப்டன் கால் தூசிக்கு ஈடாக மாட்டார்கள். நான் யாரிடமும் பிச்சை எடுப்பவன் அல்ல. ஏன் மற்றவர்கள் நடிப்பை இரட்டிப்பு பண்ணுகிறாய் என்பதுதான் என் கேள்வி. என்னை மறைத்துவிட்டு, நீ பெரிய ஆளானால், நான் தான் உண்மையான கருப்பு. நான் இரண்டு நிமிடம் நடித்திருந்தாலும் நான்கு நிமிடம் நடித்திருந்தாலும் பரவாயில்லை. அதை தைரியம் இருந்தால் போடுங்கள். கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ஐந்து நிமிடம் தானே வந்தாரு? என கேள்வி எழுப்பியவர், ஹீரோக்கள் ஹீரோவாக இருங்கள். நன்றாக சம்பாதியுங்கள். என்ன வேணாலும் செய்யுங்கள். சினிமா ஒரு கூட்டு குடும்பம். அதை நினைவில் கொள்ளுங்கள் என எச்சரித்தார். மேலும், ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் மரியாதை செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியமானது. சினிமாவில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும், விளம்பர மீடியா உள்ளிட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன். இது என்னுடைய ஊர், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய சினிமா. ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களுடைய வேலையை உண்மையாகச் செய்தாலே போதும். யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்றார். அதோடு, கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெரிய மனிதர்கள், எங்களைப் போன்றவர்களின் உழைப்பை மதித்து, உரிய இடத்தைக் கொடுக்க வேண்டும். சினிமா எப்போதுமே ஒரு ஜனநாயகத் தன்மையோடு இருக்க வேண்டும். ஒரு கதாநாயகன் வெற்றி பெறுகிறான் என்றால், அதற்குப் பின்னால் நிற்கும் நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் வியர்வை இருக்கிறது. தயவுசெய்து இனிவரும் காலங்களிலாவது பத்திரிகை விளம்பரங்களிலும், போஸ்டர்களிலும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களைத் தெளிவாகப் போடுங்கள்; அவர்களை ஊக்குவியுங்கள்” என குமுறி வெடித்துள்ளார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு வீடியோ வெளியாகி, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும் நடிகர் சூர்யாவும் இப்படி செய்யலாமா? சினிமாவில் ஒருவர் வில்லனாக இருந்தாலும், அவர்களது பிள்ளைகளுக்கு அவர்கள்தான் ஹீரோ. அப்படியிருக்க, அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு ஷூட்டிங்கில் நடித்த காட்சிகள் வராமல் போனதால் ஏற்படும் ஏமாற்றம், அதற்கு பதில் சொல்லமுடியாமல் தவிக்கும் தவிப்பு யாருக்கும் வரக்கூடாது எனவும் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி குறித்து மன்சூர் அலிகான் ஆவேசமாக விமர்சித்துள்ளது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. சூர்யாவின் குடும்பத்தினர் குறித்துப் பேசிய மன்சூர் அலிகான், அவர்கள் சொத்துகளை வாங்குவதையும், 'அகரம் ஃபவுண்டேஷன்' மூலம் நல்ல பெயர் எடுப்பதையும் சுட்டிக்காட்டி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.