பிரபலங்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட சமையல் போட்டி: சமந்தா தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களை ஒன்றிணைத்து உணவு மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’. இந்த நிகழ்ச்சியை நடிகை சமந்தா ரூத் பிரபு முன்னின்று நடத்த உள்ளார். சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி சோனி விழா மற்றும் சோனி லிவ் தளங்களில் ஒளிபரப்பாக உள்ளது. உலகளவில் பிரபலமான ‘மாஸ்டர்செஃப்’ நிகழ்ச்சியின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தமிழ் பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தமிழ் உணவு வகைகள், உள்ளூர் சுவைகள் மற்றும் தமிழ் பிரபலங்களின் தனித்துவமான கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து சமந்தா கூறுகையில், “நான் இதுவரை செய்திராத ஒரு விஷயம் இது. அதனால்தான் இந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை. உணவு என்பது மக்களை ஒன்றிணைத்து, நினைவுகளை உருவாக்கும் ஒரு சிறந்த வழி. கேமராவுக்கு முன்பு நாம் வழக்கமாக பார்க்காத ஒரு பக்கத்தையும் அது வெளிப்படுத்தும். தமிழ் திரையுலகின் நமக்கு பிடித்த நட்சத்திரங்கள் சமையலறைக்குள் அடி எடுத்து வைத்து, அபாயங்களை எதிர்கொண்டு, தவறுகள் செய்து, புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு சமைப்பதைப் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்" என்று கூறினார். இந்த நிகழ்ச்சியை பனிஜாய் ஏசியா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பங்கேற்க உள்ள மற்ற பிரபலங்கள் குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், சமந்தா கடைசியாக தெலுங்கு அதிரடி திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ படத்தில் நடித்திருந்தார். ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கும் 'செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்' எனும் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. உணவு மற்றும் பொழுது அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை, நடிகை சமந்தா ரூத் பிரபு தொகுத்து வழங்குகிறார்.
உலகளவில் புகழ்பெற்ற 'மாஸ்டர்செஃப்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 15 அன்று சோனி பிக்சர்ஸ் நெட்வெர்க்ஸ் இந்தியா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிகழ்ச்சி சோனி விழா மற்றும் சோனி லிவ் தளங்களில் ஒளிபரப்பாக உள்ளது.