PulseNews
சினிமா

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை ஆர்வமுடன் வாங்க காத்திருக்கும் ஓடிடி நிறுவனங்கள்!

ஆர்.ஜே பாலாஜி - என்.ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தை முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனமே பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்க மீண்டும் நயன்தாராவே அம்மனாக நடித்துள்ளார். இவரோடு ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தது. பின்பு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து பெரிதாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் சமீபத்தில் ரெஜினா கசாண்ட்ரா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த சூழலில் படத்தின் ஓடிடி உரிமை குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுவதாகவும் இதனால் படக்குழு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை ஆர்வமுடன் வாங்க காத்திருக்கும் ஓடிடி நிறுவனங்கள்!
PulseNews சுருக்கம்

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் 2020-ல் வெளியான 'மூக்குத்தி அம்மன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார் மற்றும் முதல் பாகத்தைத் தயாரித்த வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் மீண்டும் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார். இவருடன் ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி மற்றும் சுவாமிநாதன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள நிலையில், இப்படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema