கர்ப்பிணி மனைவியை விட்டுச் சென்ற அப்பா, சூடு வைத்து சித்திரவதை செய்த அம்மா: 19 வயதில் தனிமையான காதல் பட நடிகை
எனது அம்மா கர்ப்பமாக இருக்கும்போதே எனது அப்பா அவரை விட்டு சென்றுவிட்டதால், இந்த சமூகம் பேசிய பேச்சை தாங்க முடியாமல், ஒரு கட்டத்தில் என்னை துன்புறுத்த தொடங்கிய அம்மா என்னை விட்டுவிட்டு வேறொரு வாழ்க்கைக்கு சென்றுவிட்டார் என்று நடிகை சரண்யா நாக் கூறியுள்ளார். 1998-ம் ஆண்டு பிரஷாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சரண்யா நாக். அதன்பிகு, அஜித் பார்த்திபன் நடித்த நீ வருவாய் என என்ற படத்தில் நடித்திருந்த இவர், 2003-ம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18, 2004-ம் ஆண்டு காதல், 2005-ம் ஆண்டு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, 2009-ம் ஆண்டு பேராண்மை, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர், கடைசியாக 2014-ம் ஆண்டு முயல் என்ற படத்தில் நடித்திருந்தார். காதல் படத்தில் நாயகி சந்தியாவின் தோழியாக நடித்து பிரபலமான இவர், அதன்பிறகு பேராண்மை படத்தில் 5 நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே இன்றுவரை இவரின் அடையாளமாக உள்ளது. சமீப காலமாக உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருந்த சரண்யா நாக், தற்போது உடல் எடையை குறைத்து, ஸ்லிம்மாக மாறியுள்ளார். இது குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தான் சிறுவயதில் சந்தித்த துன்பங்கள் குறித்து பேசியுள்ளார். குமுதம் யூடியூப் சேனலில் பேசிய அவர், எனது அம்மா வயிற்றில் நான் இருக்கும்போதே, எனது அப்பா அம்மாவை விட்டு பிரிந்துவிட்டார். அதன்பிறகு சமூகத்தில், எனது அம்மா குறித்து பல வகையில் பேச தொடங்கினர். நானும் அம்மாவும், வெளியில் நடந்து போனால் எங்கள் முன்பே தவறாக பேசுவார்கள். அப்போது அம்மா அந்த கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், கையில் கிடைத்த பொருட்களை வைத்து என்னை அடிப்பார். துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் அடி வாங்கி இருக்கிறேன். அவர் என் முட்டியில் அடித்த காயத்தின் தழும்புகள் இன்னும் இருக்கிறது. எனக்கு 19 வயது ஆகும்போது அவர் என்னை தனியாக இருக்க சொல்லிவிட்டு, வேறொரு வாழ்க்கைக்கு போய்விட்டார். அவர் நம்பியவர்கள் எல்லோரும் அவரை ஏமாற்றிவிட்டார்கள். அதனால் நானும் அப்படி செய்துவிடுவேன் என்பது தான் அவரின் பயம். ஆனால், நான் அப்படி இருக்க மாட்டேன் என்று சொன்னாலும் அவருக்கு அந்த புரிதல் இல்லை. அப்போது கோபம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. எனக்கு அப்பா இல்லை என்பது என் தவறு அல்ல, அதேபோல் என் அம்மா என்னை விட்டு சென்றது அவரது தவறு அல்ல, இது சமூகத்தின் தவறு என்றுதான் சொல்வேன் என்று சரண்யா நாக் கூறியுள்ளார்.

தனது தாயார் கர்ப்பமாக இருந்தபோதே தந்தை அவரைப் பிரிந்து சென்றுவிட்டதாகவும், அதனால் சமூகத்தின் கேலிப் பேச்சுகளைத் தாங்க முடியாமல் மனமுடைந்த தாய், தன்னைத் துன்புறுத்திவிட்டு வேறொரு வாழ்க்கையைத் தேடிச் சென்றுவிட்டதாகவும் நடிகை சரண்யா நாக் தெரிவித்துள்ளார். இதனால் தனது 19 வயதிலேயே அவர் தனிமையில் விடப்பட்டதாகக் கூறியுள்ளார்.
1998-ல் வெளியான 'காதல் கவிதை' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சரண்யா நாக், பின்னர் 'நீ வருவாய் என' மற்றும் 'எனக்கு 20 உனக்கு 18' போன்ற படங்களில் நடித்துள்ளார். இத்தகவலை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.