மாமியார் – மருமகன் மோதல், பேரனுக்கு புத்தி சொன்ன பாட்டி: கார்த்திகை தீபம் அப்டேட்
கள்ள நோட்டு விவகாரத்தில் சிக்கிய ஜீவா.. வீட்டை விட்டு வெளியேற்றிய அப்பத்தா.. சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்! சின்னஞ்சிறு கிளியே சீரியலில், கடந்த எபிசோடில் கள்ள நோட்டு விவகாரத்தில் பணத்தை எடுத்தது ஜீவாதான் என்பது தெரியவந்த நிலையில், இன்றைய எபிசோடில் அதிரடி திருப்பங்கள் காத்திருக்கின்றன. உண்மை வெளிவந்ததைத் தொடர்ந்து ஆவேசமடையும் அப்பத்தா, ஜீவாவை வீட்டிற்குள் வரக் கூடாது என்று கூறி வெளியே அனுப்பிவிடுகிறார். இதனால் ஜீவா வீட்டிற்கு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதையடுத்து அப்பத்தாவும் தேவியும் வாசுதேவனுக்கு போன் செய்து, ஜீவாவை வீட்டிலிருந்து அனுப்பிவிட்டதாக தெரிவிக்கின்றனர். இதைக் கேட்டு மகிழ்ச்சியடையும் வாசுதேவன், இனி ஜீவாவும் மீனாட்சியும் நெருக்கமாகும் வாய்ப்பு இருக்காது என்று நினைத்து சந்தோஷப்படுகிறார். அதே நேரத்தில், தான் கேட்ட வைர மோதிரத்தை வாங்கித் தருமாறு தேவி கூற, ஜீவாவை முழுமையாக வீட்டை விட்டு வெளியேற்றினால் அதை வாங்கித் தருவதாக வாசுதேவன் உறுதியளிக்கிறார். இதன் பின்னர் மீனாட்சியையும் வீட்டிலிருந்து வெளியேற்ற திட்டம் தீட்டப்படுகிறது. ஜீவா எடுத்த பணம் குறித்து மீனாட்சிக்கு தெரியாமல் இருக்க முடியாது என்று கூறி, குடும்பத்தினர் அவர்மீதும் சந்தேகத்தை திருப்ப முயல்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மீனாட்சி தெளிவுபடுத்துகிறார். அப்போது மீனாட்சிக்கு ஆதரவாக தேன்மொழி பேச, அப்பத்தா மேலும் கோபமடைந்து, ஜீவா எடுத்த பணத்தை மீனாட்சியிடமே கொடுத்திருக்கலாம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கிறார். இந்த குற்றச்சாட்டால் வேதனையடையும் மீனாட்சி, இப்படி அவமானப்படுத்தப்படும் வீட்டில் தன்னால் இருக்க முடியாது என்று கூறுகிறார். அதற்கு அப்பத்தா, "பிடிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போ" என்று பதிலளித்து அதிர்ச்சி கொடுக்கிறார். மறுபுறம், வீட்டின் திண்ணையில் படுத்திருக்கும் ஜீவாவை அங்கிருந்தும் விரட்ட முயலும் தேவி, ஒரு வாளி தண்ணீரை அவன் மீது ஊற்றுகிறார். இதைப் பார்த்த கயல், ஜீவாவுக்கு ஆதரவாக பேசி சண்டை போடுகிறாள். பிறகு மீனாட்சி ஜீவாவிடம் கண்டிப்பா உனக்காக நீ பணத்தை எடுத்து இருக்க மாட்ட யாருக்காக எடுத்த அந்த உண்மையை சொல்லு என்று கேள்வி கேட்க ஜீவா சொல்ல மறுக்கிறான். ஜீவாவும் மீனாட்சியும் இந்த சிக்கலை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? குடும்பத்தினரின் அடுத்த கட்ட திட்டம் என்ன? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சவால் விட்ட கார்த்திக்.. ரேவதிக்கு பாட்டி சொன்ன அறிவுரை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தில் எதிர்பாராத அதிர்ச்சியை சந்தித்த நிலையில், இன்று நடைபெறவுள்ள பரபரப்பான சம்பவங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளன. ரேவதியின் வேண்டுகோளை ஏற்ற பஞ்சாயத்து, கார்த்திக் மற்றும் ரேவதியை காசு வெட்டி பிரித்தது செல்லாது என்று தீர்ப்பளிக்கிறது. இதனால் சாமுண்டீஸ்வரி கடும் கோபத்தில் ஆழ்கிறாள். இதனைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரியை சந்திக்கும் கார்த்திக், "ரேவதியை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அவள் விருப்பப்பட்டுத்தான் என்னுடன் வந்திருக்கிறாள். அது உங்களுக்கும் தெரியும். என்னையும் ரேவதியையும் யாராலும் பிரிக்க முடியாது" என்று உறுதியாக சவால் விடுக்கிறான். மறுபக்கம், அம்மா என்ன பேசினார் என்று ரேவதி கார்த்திக்கிடம் கேட்கிறாள். ஆனால் நடந்ததை முழுமையாக கூறாமல் கார்த்திக் சற்று மாற்றிச் சொல்கிறான். இருந்தாலும், அம்மா என்ன பேசியிருப்பார் என்பதை ரேவதி புரிந்துகொண்டு மனதிற்குள் வருத்தப்படுகிறாள். அடுத்ததாக சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு திரும்ப, வீட்டில் உள்ள அனைவரும் பஞ்சாயத்து முடிவை தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். பஞ்சாயத்தில் நடந்த விஷயங்களை சாமுண்டீஸ்வரி கூறியபோது, ராஜராஜன் ரேவதிக்கு ஆதரவாக பேசுகிறார். இதனால் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி மேலும் எரிச்சலடைகிறாள். இந்நிலையில், ரேவதி பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்த அனைத்தையும் கூறி மனக்குமுறலை வெளிப்படுத்துகிறாள். அதைக் கேட்டு வருத்தப்படும் பரமேஸ்வரி, "உன் அம்மா ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை" என கூறுகிறார். மேலும், ஒரு கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றினால் உன்னையும் கார்த்திக்கையும் யாராலும் பிரிக்க முடியாது என்று நம்பிக்கையூட்டும் அறிவுரையையும் வழங்குகிறார். இப்படி பல திருப்பங்களுடன் நகரும் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கள்ள நோட்டு விவகாரத்தில் ஜீவாதான் பணத்தை எடுத்தார் என்பது உறுதியானதைத் தொடர்ந்து, இன்றைய ‘சின்னஞ்சிறு கிளியே’ தொடரில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. உண்மையை அறிந்த பாட்டி மிகுந்த ஆவேசமடைந்து, ஜீவாவை வீட்டிற்குள் நுழையக் கூடாது என்று கூறி வெளியேற்றுகிறார்.
இதனால் ஜீவா தனது வீட்டிற்கு வெளியே தங்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார். இந்தச் சூழலில், ஜீவாவின் நிலை குறித்து பேரனிடம் பாட்டி அறிவுரை கூறுவதையும், கதையில் ஏற்படும் திருப்பங்களையும் இன்றைய எபிசோட் விவரிக்கிறது.