PulseNews
சினிமா

‘வருங்கால முதல்வரே...’ - ரசிகரின் கூச்சலும் சிவகார்த்திகேயனின் ரியாக்‌ஷனும்

சென்னையில் நடந்த ஒரு நகைக்கட திறப்பு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஒரு வயதான மூதாட்டி, ‘உன்னை பார்த்ததும் ரொம்ப சந்தோஷம், நீ நல்லா இருக்கனும்’ என முகமலர்ச்சியுடன் வாழ்த்தும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனிடையே சிவகார்த்திகேயன் மேடையில் நிற்கும் போது, அவரிடம் தொகுப்பாளினி பேசுவதற்காக மைக்கை கொடுக்க அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் ‘வருங்கால முதல்வரே’ எனக் கூச்சலிட உடனே சிவகார்த்திகேயன் வாயில் விரலை வைத்தப்படி வேண்டாம் என்ற பொருளில் ‘உஷ்’ என்ற சைகை செய்தார். இந்த ரியாக்‌ஷன் வீடியோவும் வைரலாகி வருகிறது. இதனிடையே மேடையில் பேசிய அவர், “ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு பிராண்டோட அசோசியேட் ஆகிறேன். கிட்டத்தட்ட 13 வருஷம் ஆகிடுச்சு. தங்கத்துக்கு மதிப்பு குறைந்ததே கிடையாது.. ஏறிகிட்டே தான் இருக்கு. தங்கம் வாங்குவதை கேஷுவலாக யாரும் செய்வது இல்லை. நல்ல நாளை தேர்ந்தெடுத்து நல்ல நினைவுகளுக்காகத்தான் வாங்குறோம். அதனால் உங்களது நல்ல நாட்களில் நானும் அசோசியேட் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிறுவனத்துடன் வேலை செய்ய ஒத்துக்கொண்டேன்” என்றார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘வருங்கால முதல்வரே...’ - ரசிகரின் கூச்சலும் சிவகார்த்திகேயனின் ரியாக்‌ஷனும்
PulseNews சுருக்கம்

சென்னையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்த நிலையில், அந்த நிகழ்வின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, மூதாட்டி ஒருவர் சிவகார்த்திகேயனை வாழ்த்தும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியின்போது மேடையில் தொகுப்பாளினி மைக்கை சிவகார்த்திகேயனிடம் கொடுத்த சமயத்தில், கூட்டத்திலிருந்த ரசிகர் ஒருவர் அவரை 'வருங்கால முதல்வர்' என்று உரக்க அழைத்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema