PulseNews
சினிமா

கண்களை கழுவி 20 வருஷம் ஆச்சு, என் அழகின் ரகசியம் இதுதான்: சிவாங்கி அம்மா சொன்ன சிறப்பான டிப்ஸ்

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகியும், கர்நாடக இசைக் கலைஞருமான பின்னி கிருஷ்ணகுமார், ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்திற்காக வித்யாசாகர் இசையமைத்த ‘ரா ரா சரசக்கு ரா ரா’ என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின்னர் பல திரைப்படங்களில் பாடல் பாடியுள்ளார். பின்னியின் கணவர் கிருஷ்ணகுமாரும் ஒரு பாடகர் ஆவார். பின்னியைப் போலவே அவரது மகளும் பாடகியுமான சிவாங்கி கிருஷ்ணகுமாரும் இன்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். சிவாங்கியுடன் பின்னி இணைந்து அளிக்கும் நேர்காணல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், தாயும் மகளும் இணைந்து பங்கேற்ற புதிய நேர்காணல் தற்போது கவனம் பெற்றுள்ளது. உங்களுடைய அழகு ரகசியம் என்ன?’ என்று தொகுப்பாளர் கேட்டபோது, அதற்கு பதில் அளித்த பின்னி, “20 ஆண்டுகளாக நான் கண்களைக் கழுவியதே இல்லை” என்று பதிலளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் கண்களைக் கழுவுவதில்லை. இரவு தூங்கச் செல்லும்போதும் கண்களில் ஐலைனர் மற்றும் கண்மை ஆகியவற்றை அப்படியே வைத்திருப்பேன். கண்மை அழிந்துவிட்டால், அதன் மேலேயே மீண்டும் எழுதுவேன். View this post on Instagram A post shared by Variety Media (@varietymedia_) எனக்கு 3 வயது முதலே கண்களில் அடர்த்தியாக மை தீட்டுவார்கள். அன்றிலிருந்து இதுதான் எனது பழக்கம். கண்களில் மை தீட்டாமல் நான் எங்கும் செல்ல மாட்டேன். கண்களில் மை தீட்டாமல் என்னைப் பார்ப்பதற்கே எனக்குப் பிடிக்காது. எனக்கு லிப்ஸ்டிக் மற்றும் கண்களில் மை தீட்டுவது கட்டாயம் என்று கூறியுள்ளார். View this post on Instagram A post shared by Variety Media (@varietymedia_) அதேபோல், தனது சருமப் பராமரிப்பு குறித்துப் பேசிய பின்னி, “நான் ஸ்கின் கேர் எதுவும் செய்வதில்லை. முன்பு ஒரு பாட்டி தயாரிக்கும் நெய்யை முகத்தில் தடவுவேன். சுமார் ஆறு மாதங்கள் அதைச் செய்து வந்தேன். தற்போது அது கிடைப்பதில்லை. அந்த நெய்யை 100 முறை கழுவி எடுத்துத் தயாரிப்பார்கள்” என்று தெரிவித்தார். View this post on Instagram A post shared by Variety Media (@varietymedia_) அம்மா பின்னி கிருஷ்ணகுமார் இசைத்துறையில் சிறந்து விளங்கும் நிலையில், அவரது மகள் சிவாங்கி கிருஷ்ணகுமார் பாடகி என்பதைக் கடந்து நடிகை, மாடல், நடனக் கலைஞர் மற்றும் இன்ஃப்ளூயன்சர் எனப் பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கண்களை கழுவி 20 வருஷம் ஆச்சு, என் அழகின் ரகசியம் இதுதான்: சிவாங்கி அம்மா சொன்ன சிறப்பான டிப்ஸ்
PulseNews சுருக்கம்

பிரபல பின்னணிப் பாடகி பின்னி கிருஷ்ணகுமார், சந்திரமுகி திரைப்படத்தின் ‘ரா ரா’ பாடல் மூலம் புகழ்பெற்றவர். இவரது கணவர் கிருஷ்ணகுமாரும் ஒரு பாடகராக அறியப்படுகிறார். இவர்களது மகளான சிவாங்கி கிருஷ்ணகுமாரும் தற்போது புகழ்பெற்ற பாடகியாக வலம் வருகிறார்.

தன்னுடைய அழகின் ரகசியம் குறித்துப் பேசிய பின்னி, கடந்த 20 ஆண்டுகளாக தான் கண்களைக் கழுவியதே இல்லை என்ற ஆச்சரியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் சில சிறப்பு டிப்ஸ்களையும் வழங்கியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema