OTT Movies: மனைவியால் நோயாளிகளை கொல்லும் டாக்டர்: இந்த வீக் எண்டில் மிஸ் பண்ணக்கூடாத த்ரில்லர் படங்கள்
வார இறுதி என்றாலே தியேட்டர் மற்றும் ஒடிடியில் என்ன படம் பார்க்கலாம் என்று பலரும் யோசிப்பார்கள். அந்த வரிசையில், இந்த வீக் எண்டில் வீட்டில் இருந்தபடியே நல்ல படங்களைப் பார்த்து என்ஜாய் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால், அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்த திரைப்படங்கள் உங்கள் வீக் எண்டை சுவாரஸ்யமாக மாற்றும். காமெடி முதல் சைக்கலாஜிக்கல் திரில்லர் வரை வெவ்வேறு ஜானர்களில் இடம்பெறும் இந்த படங்களில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து பார்த்து மகிழலாம். சகமனோ சகமன் (Sukhamano Sukhamann) காமெடி, ஃபேண்டஸி மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் சகமனோ சகமன். வித்தியாசமான கதைக்களத்துடன் பார்வையாளர்களை கவரும் இப்படத்தில் லியோ படத்தில் விஜய் மகனாக நடித்த மேத்யூ தாமஸ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம். பரநாட்டியம் (Bharathanatyam) மலையாளத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு கிருஷ்ணதாஸ் முரளி இயக்கத்தில் வெளியான காமெடி ட்ராமா திரைப்படம் 'பரதநாட்டியம்'. நகைச்சுவையுடன் கூடிய கதைக்களத்தை விரும்புபவர்களுக்கு இந்த படம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு குற்றத்தை செய்து, ஒரு குடும்பமே அந்த குற்றத்தை எப்படி மறைக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதை. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளங்களில் பார்க்கலாம். டோஸ் (Dose) ஒரு மருத்துவமனையில் நடக்கும் மர்மமான கொலைகள், அதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட டோஸ் திரைப்படத்தில், சிஜூ வில்சன் நடித்திருந்தார். மலையாளத்தில் வெளியான சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமான டோஸ், படத்தை இந்த வீக் எண்டில் அமேசான் பிரைம் ஓடிடியில் கிடைக்கிறது. வளத்து வாஷத்தே கள்ளன் (Valathu Vashathe Kallan) க்ரைம் மற்றும் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் வளத்து வாஷத்தே கள்ளன். தனது மகளின் கொலைக்காக பழிவாங்க துடிக்கும் ஒரு அப்பா – காவல்துறை அதிகாரி இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் இந்த படத்தின் கதை. மர்மம் மற்றும் பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு இப்படம் நல்ல தேர்வாக இருக்கும். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம். அரோப்பி (Aroopi) மலையாளத்தில் வெளியாகியுள்ள லேட்டஸ்ட் திரில்லர் திரைப்படம் அரோப்பி. தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரஸ்யத்தை தக்கவைக்கும் திரில்லர் படங்களை விரும்புபவர்கள் இந்த படத்தை தங்கள் வீக் எண்ட் வாட்ச் லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம். காமெடி, ஃபேண்டஸி, க்ரைம் மற்றும் சைக்கலாஜிக்கல் திரில்லர் என பல்வேறு ஜானர்களில் இந்த 5 திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த வீக் எண்டில் என்ன படம் பார்ப்பது என்று யோசிக்கும் பலருக்கும் இந்த திரைப்படங்கள் சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.

வார இறுதி நாட்களில் வீட்டில் இருந்தபடியே ரசிக்கக்கூடிய சிறந்த திரைப்படங்களை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம். காமெடி முதல் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வரை பல்வேறு வகையிலான படங்கள் உங்கள் பொழுதுபோக்கை சுவாரஸ்யமாக்கும் வகையில் உள்ளன.
மனைவியால் நோயாளிகளை கொல்லும் டாக்டர் குறித்த த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்கள் உள்ளிட்ட பல புதிய படைப்புகளை இந்த வார இறுதியில் நீங்கள் கண்டு மகிழலாம். தங்களுக்கு பிடித்தமான திரைப்படங்களைத் தேர்வு செய்து உங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள்.